பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பொழுது புலர்ந்தது

ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கூடினர்கள். அவர்கள் செய்த முடிவின் சாரம் வருமாறு :

(1) காங்கிரஸ் கோரிக்கையை சர்க்கார் நிராகரித்து விட்டதிலிருந்து சர்க்காருக்கு அதிகாரத்தை விட்டு விலகப் பிரியமில்லை என்று தெளிவாகிறது.

(2) காங்கிரஸ் மைனரிட்டிகளுக்குப் பரிபூரணமான பாதுகாப்பு அளிப்பதாகக் கூறியிருந்தும் மைனரிட்டிகளை அடக்க முயல்வதாகக் கூறுவது வேற்றுமைகளை சர்க்கார் தான் சிருஷ்டிக்கிறார்கள் என்று, நாட்டில் பரவியுள்ள அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.

(3) காங்கிரஸ் இந்த இக்கட்டான சமயத்தில் சர்க் காருக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பாததை சர்க்கார் அலட்சியம் செய்வதோடு கிற்காமல், ஜனங்களின் கெளர வத்தையும் உரிமைகளையும் காக்கும் பொருட்டு ஒரு போர் துவக்கும்படியும் செய்து வருகிறார்கள்.

(4) அதன் பின் செப்டம்பர் 15-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் பம்பாயில் கூடி காரியக் கமிட்டியாருடைய தீர்மானத்தைப் பரிசீலனை செய்தபின் -சர்க்கார் இந்த யுத்தத்தைப் பற்றி யாதொரு அபிப் பிராயமும் கூறவொட்டாமல் தடுக்கிறார்கள் ; அவ்விதம் பேச்சு சுதந்திரத்தை இழப்பதானுல் இந்திய மகா ஜனங் களின் அடிமைத் தளே ஒரு நாளும் அறுபடாது, அழிந்து போவார்கள். அதல்ை அதற்காகப் போர் துவக்கும்படி யான கிலேமையைச் சர்க்கார் ஏற்படுத்திவிட்டார்கள். ஆனல் காங்கிரஸுக்கு பிரிட்டிஷாரிடத்தில் மதிப்புளதே யன்றி வெறுப்புக் கிடையாது. அவர்களுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்ற எண்ணமே உண்டு. ஆதலால் அதற் கிணங்க காட்டுக்கு வழி காட்டுமாறு மகாத்மா காந்தி யடிகளேக் கேட்டுக்கொள்கிருேம்-என்று முடிவு செய் தார்கள்.