பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரும் சத்தியாக்ரகமும் 47

அதன் பின் காந்தியடிகள் அந்தக் கூட்டத்தில் நாம் பிரிட்டனுக்குக் கேடு சூழவுமில்லை, அது தேர்ற்கவேண் டும் என்று எண்ணவுமில்லை. அதற்குத் தொந்தரவு தரப் போவதுமில்லை. ஆனல் யுத்தத்தைப் பற்றி அபிப் பிராயம் கூறும் பேச்சு சுதந்திரத்தை நாம் இழந்துவிட முடியாது. அந்தச் சிறு சுதந்திரமும் போய்விட்டால் காங்கிரஸ் அழிந்துபோக வேண்டியதுதானே என்று உங்கள் தீர்மானத்துடன் சென்று வைவிராயிடம் கேட் பேன். எதுவாயினும், சமூக சட்டமறுப்பு ஆரம்பிக்கப் போவதில்லை. ஆனல் எத்தகைய போர் என்பது குறித்து எனக்கு இன்னும் விளங்கவில்லை"-என்று விஷயத் தைத் தெளிவாக விளக்கினர்.

மகாத்மா காந்தியடிகள் கூறுவது உண்மைதானே. இந்தச் சிறு சுதந்திரத்தைக்கூட வற்புறுத்தாது இருந்து விட்டால், இந்தியா தேசம் பிரிட்டிஷ் ஆட்சியே போதும் என்று திருப்தி அடைந்து விட்டதாக அல்லவா, உலகம் முழுவதும் கினேத்துவிடும் ?

சர்க்கார் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவுமாட் டார்கள், அதைப்பற்றி நம்முடைய அபிப்பிராயத்தைக் கூறச் சம்மதிக்கவுமாட்டார்கள், அப்படியானுல் நாம் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடுவதா, பேச்சு சுதந்திரத்தை இழக்க முடியாது என்று உலகமெல் லாம் தெரியும்படி செய்ய வேண்டாமா-என்று ராஜாஜி கேட்டார்.

அதல்ை காந்தியடிகள் வைஸி ராயைக் கண்டு பேசினர். ஆனல் லின் லித்கோ பிரபு அவருடைய கோரிக் கைக்கு இணங்க மறுத்துவிட்டார். அது விபரத்தையும் அதன்மேல் தாம் ஆரம்பிக்க எண்ணும் போர் முறையை யும் காந்தியடிகள் காங்கிரஸ் கமிட்டியாரிடம் கூறிஞர். அவர்கள் அவருடைய யோசனையை அங்கீகரித்து அவர் தெரிந்தெடுக்கும் சத்யாக்ரகிகளைத் தவிர வேறு யாரும் சக்யாக்ரகம் செய்யக் கூடாது என்று காங்கிரஸ்காரர் களுக்குக் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.