பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ச த் ய ா க் ர க ம்

போரில் இந்தியாவை ஈடுபடுத்தியபொழுது நம்மைக் கலந்து கொள்ளவுமில்லை. அதுதான் போகட்டும், உங்கள் யுத்த லட்சியம் யாது என்று கேட்டதற்குச் சரியான விடை கூறவுமில்லை. நீங்கள் கஷ்டமான நிலைமையில் இருக்கிறீர்கள், உங்கட்கு உதவி செய்ய விரும்புகிருேம், அதற்காக அதிகாரத்தை எங்கட்கு அளியுங்கள் என்று கேட்டதற்குச் செவி சாய்க்கவுமில்லை. அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பாவிட்டால், அது பற்றி அபிப்பிராயத்தைக் கூற எங்களுக்குள்ள உரிமை யைப் பிடுங்காதீர்கள் என்றதற்கு, அதுவும் மாட்டோம் என்று சர்க்கார் சாதித்துவிட்டார்கள். ஆதலால் காந்தி யடிகள் சட்டமறுப்பு ஆரம்பிக்காமல் இருப்பதற்கில்லே.

ஆனல் பிரிட்டன் உயிருக்கு மன்றாடும் அபாய நிலைமையிலிருக்கும்பொழுது, அதற்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதல்லவா? அதனல் காந்தியடிகள் தாம் சத்யாக்ரகம் செய்து கைதியாவதில்லை என்று தீர்மானித் துக்கொண்டதோடு தனிப்பட்டவர் சட்டமறுப்புக்கே ஏற்பாடு செய்தார்.

யாரும் அவரவர் கினைத்தவண்ணம் நினைத்த நேரம் கினேத்த இடத்தில் சத்யாக்ரகம் செய்யலாகாது; ஒவ் வொருவரும் விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும் ; விண்ணப்பதாரர் தம்முடைய சத்யாக்ரக யோக்யதை கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே சத்யாக்ரகம் செய்ய லாம். சர்க்காருக்கு விடுமுறையான நாட்களில் சத்யா