பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பொழுது புலர்ந்தது

காந்தியடிகளால் முதல் சத்தியாக்கிரகியாகத் தேர்ங் தெடுக்கப்பட்ட வினேபா பாவே அக்டோபர் 17-ந் தேதி சத்யாக்ரகம் செய்து கைதியானர். அடுத்தவர் பண்டித நேரு அக்டோபர் 21-ங் தேதி கைதியாகி நான்கு வருஷத் தண்டனேயடைந்தார். இதைக் கேட்டதும் ஒரு பார்லி மெண்டு மெம்பர் “ நான்கு வருஷமா ! இதென்ன காட்டு மிராண்டித்தனமான தண்டனே !’ என்று கூறினராம்.

இதுவும் யாருக்கு ? ஜெர்மன் கொள்கைக்குப் பரம விரோதியான ஜவஹருக்கா ? ஜெர்மன் கொள்கை ஜெயித்தால் இந்தியாவுக்குச் சுதந்திரம் ஏது என்று யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னலேயே கூறியவரா யிற்றே ! ஆயினும் என்ன, சர்க்கார் உத்தரவை மீறில்ை தண்டனே அடைய வேண்டியதுதானே, சர்க்கார் உத்தரவு சரியா என்று கேட்க அடிமைக்கு உரிமை உண்டா?

அவருக்குப் பின்னல் காங்கிரஸ் மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள், மெம்பர்கள் என்று இப்படி ஆயிரக் கணக்கான காங்கிரஸ்வாதிகள் சிறைச்சாலைக்குப் போக லானர்கள்.

நவம்பர் மாதம் கூடிய மத்திய சட்டசபையில் லின் லித்கோ பிரபு ஆகஸ்டு மாதம் கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டால் உண்மையான அதிகாரமும் பொறுப் பும் இந்தியர்கள் கைக்கு வந்துவிடுமே, அதை வேண்டாம் என்று எதிர்க்கிறீர்களே என்று கேட்டார்.

கிர்வாக சபையாருடைய தீர்மானத்தை கிராகரிக்க வைஸி ராய்க்கு அதிகாரம் இருக்கும்பொழுது கிர்வாக சபைக்கு ‘ உண்மையான அதிகாரம் ” வருவது எப்படி ?

நிர்வாக சபை தவறு செய்தால் அதை நீக்கச் சட்ட சபைக்கு அதிகாரமில்லாதபொழுது “பொறுப்பு வாய்ந்த’ கிர்வாக சபை என்று கூறுவது எவ்விதம் ?