பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்யாக்ரகம் 55

களுக்கு எல்லாம் வைஸி ராய் உயிர் கொடுத்துவிட வில்லையா ?

ஆகவே வேற்றுமை என்பதெல்லாம் வெறும் வேஷம் தான். ஆயினும் மிதவாதக் கட்சியார் 1941 மார்ச்சு மாதம் பம்பாயில் கூடி-சர்க்கார் யுத்தத்துக்குப்பின் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் டொமினியன் அந்தஸ்து தருவதாக வாக்களிக்க வேண்டுமென்றும், அதுவரை உத்யோகப்பற்றற்ற இந்தியர்களைக் கொண்டு கிர்வாக சபையை அமைத்து, சேனை, நிதி யாதிய விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களிடம் ஒப்புவித்து விட வேண்டும் என்றும், ஆனல் அவர்கள் சட்ட சபைக்கு ஜவாப்தாரியா யிருக்க வேண்டியதில்லை என்றும், சேதிை பதியே தேசத்தின் பாதுகாப்பு கிர்வாகஸ்தராய் இருக் கலாம் என்றும் தீர்மானித்தார்கள்.

ஆகவே அவர்கள் பூரண சுதந்திரமும் கேட்கவில்லை, பொறுப்பாட்சியும் கேட்கவில்லை, அதனுல் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை.

அவர்கள் கேட்டதெல்லாம்-நிர்வாக சபையில் உத்யோகப்பற்றற்ற இந்தியர்களே மெம்பர்களாக இருக்க வேண்டும் என்பதும் அவர்கள் ஆலோசனை கூறு கிறவர்களாகவே இருந்தாலும் எல்லா விஷயங்களையும் அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்பதுமேதான்.

இது காங்கிரஸ் கோரிக்கையைவிட எவ்வளவோ குறைக்கதாகும், இதற்கேனும் சர்க்கார் சம்மதித்தார் களோ ?