பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

சர்க்காரின் தாராளம்

காங்கிர ஸ்காரர்கள் காந்தியடிகளையும் அவருடைய அஹிம்சா தர்மத்தையும் பின் பற்றுகிறவர்கள். அதனல் யுத்தங்களில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள். ஆயினும் பிரிட்டன் அபாய கிலேமையில் இருப்பதைக் கண்டு, காந்தியடிகளே விட்டுப் பிரிந்து கின்று, தேசிய சர்க்கார் அமைத்தால் யுத்த முயற்சிகளில் உதவி செய்வதாகக் கூறி னர்கள்.

ஆனல் சர்க்கார் சம்மதிக்கவில்லை. அத்துடன் பேச்சு சுதந்திரமும் கிடையாது என்று கூறி விட்டார்கள். ஆல்ை அதுவே எந்த தேசத்துக்கும் ஜீவாதாரம். ஆகை யால் காங்கிரஸ் கமிட்டியாரும் காந்தியடிகளும் அதைக் காக்கும் பொருட்டு சத்யாக்ரகம் ஆரம்பித்தார்கள்.

அப்படியே சத்யாக்ரகம் செய்து சிறை புகுந்தவர்கள் அமரியின் அறிக்கையின்படி 1941 ஜூலை முதல் தேதியன்று 28 மாஜி மந்திரிகள், 290 சட்ட சபை மெம் பர்கள் உள்பட 12,129 பேர் ஆவார்கள்.

காங்கிரஸ் கிலேமை இது. ஜின்ன சாகிப்-மகாத்மா காந்தியடிகள் சாப்ரூவுக்கு எழுதியது போல்-'தம் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு வேண்டிய பலத்தை தேடுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.’ மிதவாதிகள் மிகச் சிறிய கோரிக்கை ஒன்றைக் கூறிவிட்டு சர்க்கார் அதற்கேனும் சம்மதிப்பார்களா என்று எதிர் பார்த்து எதிர்பார்த்து அலுத்துப் போயிருந்தார்கள். தேசம் முழுவதும் அதிருப்தி நிலவியிலிருந்தது.