பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாண்டிக் சாஸனம் 63

யுள்ள நாடுகள் என்றென்றைக்கும் அடிமையாகவே இருக்கவேண்டும் என்பதே அவருடைய இரத்தத்தில் ஊறிய கொள்கை, எகிப்துக்கு சுதந்திரம் அளிக்குமாறு ஜனரல் ஆலன்பி வற்புறுத்தியபொழுது, கூடாது என்று பிடிவாதமாய்க் கூறியவர் சர்ச்சிலே என்று இப்பொழுது வைஸ்ராயாக வந்துள்ள வேவல் பிரபு தாம் எழுதும் ஆலன்பி சரிதையில் கூறுகிறார்,

இப்படிப்பட்ட ஏகாதிபத்திய வாதியாகிய சர்ச்சில் அட்லாண்டிக் சாஸனத்தைத் தயாரித்தபொழுது இதன் படி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கவேண்டியதுதான் என்று எண்ணி இருக்க முடியுமா ? அவரே “ அப்படி எண்ணவில்லை, நாங்கள் சுதந்திரம் தேடிக்கொடுக்க வேண்டும் என்று விரும்பியதெல்லாம் ஜெர்மனி பிடித் துள்ள நாடுகளுக்கு மட்டும்தான் “ என்று பார்லிமெண்டு சபையில் ஸ்பஷ்டமாகக் கூறினர். -

அமெரிக்க அறிஞர் லூயி பிஷர் என்பவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டு சபையில் நடப்பதைப் பார்க்கும் பொருட்டு ஒருநாள் போயிருந்தாராம், அப்பொழுது ஒரு மெம்பர் அட்லாண்டிக் சாஸனம் இந்தியாவுக்கும் உண்டா என்று கேட்டாராம். உடனே சர்ச்சில் எழுந்து கிடையாது “ என்று ஒரே மொழியில் பதில் கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டாராம்.

அதற்கு அடுத்தவாரம் அட்லாண்டிக் சாஸனத்தை வளர்ஜிதம் செய்வதற்காக நேசதேச மகாநாடு பிரிட்டிஷ் அயல்நாட்டு விவகார மந்திரி ஈடன் துரையின் தலேமை யில் கூடியது. அதில் கானடா முதலிய டொமினியன் களுக்கு ஸ்தானம் அளிக்கப்பட்டிருந்தது. ஆளுல் இந்தி யாவுக்கு அளிக்கப்படவில்லை. அமரிமட்டுமே இந்தியா வுக்காக பிரஸ்ன்னமாயிருந்தார். அத்துடன் தலைவரும் தமது உரையில் இந்தியாவைப்பற்றிப் பிரஸ்தாபிக்கக்