பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொழுது புலர்ந்தது.

கூடவில்லை. இதர சமயங்களில் எல்லாம் இந்தியாவை டொமினியன்களுடன் சேர்த்துப் பேசுவது வழக்கமா யிருந்தும் இப்பொழுது அதைக்குறித்து மூச்சுவிடா திருந்துவிட்டார்கள். அதன் பொருள் யாது?

சர்ச்சில் அட்லாண்டிக் சாஸனம் இந்தியாவுக்குக் கிடையாது என்றார், ஈடன் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்துவிட்டார். ஆனல் கமது இந்தியா மந்திரி அமரியோ உங்களுக்கு அட்லாண்டிக் சாஸனம் எதற்கு ? அதைவிட உயர்ந்ததாயிற்றே 1940 ஆகஸ்டில் வைஸ்ராய் வெளியிட்ட யோசனைகள் என்று கேட்டார். அப்படியானல் அட்லாண்டிக் சாஸனம் எதற்கு ? அமெரிக்காவும்கூட ஆகஸ்ட் யோசனைப்படி தன்னுடைய அரசியலைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாமே. ஆங்கி லேயர் என்ன வேண்டுமானலும் கூறலாம், இந்தியர்கள் நம்பிக்கொள்வார்கள் என்று எண்ணி விட்டார்கள் போலும் !

இப்படியெல்லாம் இவர்கள் வியாக்கியானம் செய்து அழித்து விடுவார்கள் என்று யோசித்து இந்து மகா சபைத் தலைவர் சவர்க்கர் அட்லாண்டிக் சாஸனம் இந்தி யாவுக்கும் உண்டா, அமெரிக்கா எங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும்படி செய்யுமா, அப்படியில்லையாளுல் சுதக் திரம் என்று பேசுவது எல்லாம் வெறும் பித்தலாட்டமே என்று விஷயத்தை விளக்குமாறு ரூஸ்வெல்ட்டுக்குத் தந்தி அனுப்பினர்.

அதற்கு ரூஸ்வெல்ட் பதில் அனுப்பவில்லை. ஆளுல் நவம்பர் மாதத்தில் செய்த பிரசங்கத்தில் “ சுதந்திரத்திற் காகச் சண்டை செய்வது சரியான காரியம் என்றே அமெரிக்கர்கள் கம்புகிறார்கள் ‘ என்று கூறினர். ஆளுல் யாருடைய சுதந்திரத்திற்காக? எல்லோருடைய சுதந்