பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் வருகை 69

சர்க்கார் செவிசாய்க்க விரும்பாவிட்டாலும் செவி சாய்க்கும்படியான காரியங்களை ஜப்பான் வெகு துரிதத் தில் செய்துவந்தது. ஜப்பானியர் சண்டையில் இறங் கியதுதான் தாமதம், தடதட வென்று இந்தோ சைன, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், ஆகியவற்றை எல்லாம் ஆக்ரமித்துக்கொண்டார்கள். அசைக்க முடியாத கப்பற் படை அரணை சிங்கப்பூரில் கட்டுகிறேன் என்று பிடிவாத மாய் அமரிதுரை கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி கட்டிய சிங்கப்பூர் அரண் பெப்ரவரி மாதம் 15-ம் தேதி ஜப்பானியர் வசமாய்விட்டது. ரெங்கூன் காலி செய்யப்படுவதாகச் செய்தி மார்ச் 7ந்தேதி வந்தெட் டியது. பர்மாவிலிருந்து 50 ஆயிரத்துக்கு அதிகமான இந்திய மக்கள் அஸ்ஸாம் வழியாக வந்து சொல்லமுடி யாத கஷ்டங்கள் அநுபவித்தார்கள். பர்மா போனதால் சைனவுக்கு வேண்டிய தளவாடங்கள் அனுப்பமுடியாமல் ஆயிற்று.

ஜப்பான, அந்த வெள்ளத்துக்கு அணைபோடுவது எப்படி என்று எல்லோரும் கவலையுற்றார்கள். அவனே இந்தியாவுக்கு வரவொட்டாமல் செய்தால் மட்டுமே விமோசனம் உண்டு என்று எண்ணினர்கள்.

இந்த எண் னமும் கவலேயும் இந்தியாவில் மட்டும் அன்று, இங்கிலாந்திலும் பாவிற்று. எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒத்துறைக்கும்படி சமாதானப்படுத்த வேண் டாமா என்ற பேர்சாகவே யிருந்தது. பார்லிமெண்டு மெம்பர்கள் காலங்க க் திக் l'I, II லங்கடத்தி -?) யர்லாந்தை இழந்தோம், அதுபோல் செய்துவிட வேண்டாம். டர்ஹாம் பிரபுவை அனுப்பிக் கானடாவை சமாதானப்படுத்தியது போல யாரையேனும் இந்தியாவுக்கு அனுப்பினல் என்ன என்று கூறினர்கள்.