பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பொழுது புலர்ந்தது

‘ சைன நான்கு வருஷ காலமாக ஜப்பானை எதிர்த்து கின்று வருகிறது. ரஷ்யா ஜெர்மன் வெள்ளத்தைத் தனி யாக கின்று தேக்கி வருகிறது, அப்படிச் செய்வதற்கு அவைகளுக்குள்ள பலம் யாது, அந்த பலத்தை இந்தியா வுக்கும் அளியுங்கள் “ என்று ஸ்டோக்ஸ் என்னும் மெம்பர் கூறினர்.

ஆல்ை சர்ச்சில் இதற்குச் சம்மதிக்க முடியுமா? அவருடைய மனம் இடங்கொடாதுதான், ஆனல் அபாயம் அதிகமாய்விட்டது, அனேவரும் ஏதேனும் உடனே செய்ய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்துகிறார் கள். அத்துடன் காங்கிரஸ்காரர்தாம் ஜனங்களைத் தட்டி எழுப்பச் சக்தி வாய்ந்தவர்களா யிருக்கிறார்கள். ஆதலால் சர்ச்சில் 1942 மார்ச் 12-ம் தேதி பார்லிமெண்டு சபையில் இந்தியாவுக்கு ஸ்ர் ஸ்டாபோர்டு கிரிப்ஸை அனுப்பி அதன் ஒத்துழைப்பைப் பெறப் போவதாகக் கூறினர். அப்படியே கிரிப்ஸ் துரையும் மார்ச் 23-ம்தேதி யன்று புது டில்லியில் வந்து சேர்ந்தார்.