பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பொழுது புலர்ந்தது

கார் அதுமுடியாது, ஒரே ஐக்யநாடு, ஒரேசமஷ்டி சர்க்கார், சேர்ந்து வாழ்ந்தபின் பிரிந்துகொள்ள உரிமை உண்டே யன்றிசேராதிருக்க உரிமை கிடையாது, அதுவும் சகலகட் சிப் பிரதிநிதிகளும் அடங்கிய அரசியல் நிர்ணய சபை தீர்மானிக்க வேண்டிய விஷயமேயன்றி இப்பொழுதே முடித்துவிடக் கூடிய விஷயமன்று என்று கூறவேண்டி யதேகியாயமாயிருக்க, அப்படிக் கூருமல் அதற்குப் பதி லாககாட்டை நான்காகப் பிரிக்கத் திட்டம்போட்டுவிட் டார்கள். அரசியல் வகுத்து ஒன்றுசேரும் பகுதி ஒன்று ; அதில் சேராதுநிற்கும் மாகாணங்கள் ஒன்று ; அப்படி விலகி நிற்கும் மாகாணங்களில் சில ஒன்று சேர்ந்து நிற் பது ஒன்று ; தனித்து கிற்கும் சமஸ்தானங்கள் ஒன்று.

காந்தியடிகள் ‘ பிரிய விரும்புகிறவர்களுக்குப் பிரிய இடங்தரவேண்டியது நியாயமே யானலும் முதலிலேயே பிரித்துவிட எண்ணுவது அடாத பாபச்செயலே யாகும் “ என்று கூறினர். ‘’ ஒன்று சேர்ந்து வாழ்வதுதான் நல்லது. ஒன்று சேர்ந்து வாழ்ந்தபின் ஒன்று சேர்ந்திருக்க முடியாது என்று கண்டால் பிரிந்துகொள்ளட்டும். அப் படிக்கின்றி இப்பொழுதே சேராதிருக்கும் உரிமையைக் கொடுப்பது விவாகத்துக்கு முன்பே விவாகரத்துசெய் வதுபோலாகும் ‘ என்று ஆஸாதும் நேருவும் கூறி ஞர்கள்.

பிரிட்டிஷார் தாங்கள் வந்து செய்த நன்மைகளில் தேசத்தை ஒரே ஐக்கியமாக்கியது ஒன்று என்று எப் பொழுதும் பிரமாதமாகப் பெருமை பேசிக்கொள்வது வழக்கம். அப்படியிருக்க அவர்கள் இதுவரை அரும்பாடு பட்டு ஆக்கியதை இப்பொழுது அரைகொடியில் அழிக்க

எண்ணுவதேன் ?

நாட்டைப் பிரிக்கும் இந்த விஷயம்தான் கிரிப்ஸ் திட்டத்தில் பிரதானமான குறை. கானடாவில் ஆங்கிலேய