பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பொழுது புலர்ந்தது

யால் கிரிப்ஸ் காங்கிரஸ் தலைவர் ஆஸாதுடனும் நேருவுட ஆணுமே பேசலானர்.

போருக்குப் பின்னுள்ள விஷயங்களைக் குறித்து அவ ராகவே பேசலாம், ஆல்ை இப்பொழுது உடனே செய்ய வேண்டிய அரசியல் - பாதுகாப்பு விஷயங்களைக் குறித்து வைஸி ராயிடமும் சேனதிபதியிடமும் கலந்துகொள்ள வேண்டியவரா யிருந்தார். அப்படியே அவர்களிடம் கலந்துகொண்டார், ஆஸாத்தையும் நேருவையும் கலந்து கொள்ளுமாறு கூறினர்.

இதன் பயனுக அவர் சேனதிபதியின் யுத்த இலா காவிலிருந்து சில விஷயங்களைப் பிரித்து, பாதுகாப்பு இலாகா என்ற பெயர்கொடுத்து, ஜனப்பிரதிநிதியான இந்தியர் ஒருவரை வைஸி ராய் நிர்வாக சபையில் சேர்த் துக்கொண்டு, அவர்வசம் கொடுக்கப்படும் என்று கூறி அப்படிப் பிரித்துக்கொடுக்கும் விஷயங்களின் ஜாப்தாவை ஆஸாதுக்கு அனுப்பிவைத்தார்.

அப்படிப் பிரித்துக் கொடுப்பதாகக் கூறிய விஷயங் கள் எவை? துருப்புக்களுக்கு வேண்டிய ஹோட்டல்கள் முதலிய செளகர்யங்கள் செய்தல், சேனைக்கு வேண்டிய பேப்பர், பென்ஸில் முதலியன தயாரித்தல், எதிரி வந்தால் ஊரைவிட்டு ஒட வசதிசெய்து கொடுத்தல், இப்படிப் பதின்மூன்று மகத்தான காரியங்கள் செய்ய இந்தியா வுக்கு உடனடியாகச் சுதந்திரம் கொடுத்து விடுவார்க ளாம்! இதைவிட நமக்கு என்னவேண்டும்? யார்க்கும் கிடையாத பரிபூரண சுதந்திரம் அடைந்த மாதிரிதானே ! காங்கிரஸ் கமிட்டியார் இது பொருந்தாது என்று கூறவே அமெரிக்க ஜனதிபதியின் பிரதிநிதியாக இந்தியா வுக்கு வந்திருந்த கர்னல் ஜாண்ஸன் என்பவர் சமரவலம் பேச ஆரம்பித்தார்.அதன் பயனக புதியதோர் யோசனை ஆஸாதுக்கு அனுப்பப்பட்டது. ஆஸாத் திருத்தினர்,