பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 81

படாது. பிரிட்டிஷ் சர்க்கார்மட்டும் பிரித்தாளும் முறையை விட்டுவிடட்டும், உடனே ஒற்றுமை உண்டாய்விடும். ஆல்ை நடப்பதைப் பார்த்தால் அவர்கள் அதிகாரத்தைக் கொடாமலிருப்பதற்காக ஜனங்களிடைப் பிளவுகளை உண்டாக்கி வருவதில் கண்ணுயிருக்கிறார்களேயன்றி எங்களைப்போல் தேசப் பாதுகாப்பில் கண்ணுயில்லை என்று முடிவுசெய்ய வேண்டியவர்களா யிருக்கிருேம் “ என்று பதில் எழுதினர்.

இந்தவிதமாக கிரிப்ஸ் திட்டம் பத்துங்ாள் அதிசய மாக இருந்து மறைந்து போயிற்று. கிரிப்ஸ்-க்குத் தாம் வந்த காரியம் பலனடையாமற் போயிற்றே என்று வருத் தம். வைஸி ராயின் நிர்வாக சபையில் மெம்பராயிருந்த டாக்டர் ராகவேந்திர ராவ் கூறியதுபோல, கிரிப்ஸ் இந்தி யர்கள் என்ன கூறினலும் எளிதில் நம்பிவிடும் பேதைகள் என்று எண்ணியிருந்தார். ஏமாந்துபோனர். அதனல் கோபம் உண்டாய்விட்டது. காங்கிரஸ்தான் காந்தியடிக ளின் போதனையைக் கேட்டு காரியத்தைக் கெடுத்துவிட் டது என்று துாற்ற ஆரம்பித்தார்.

காந்தியடிகளின் அஹிம்சா போதனை கிரிப்ஸ் திட் டத்துக்குக் குறுக்கே நிற்கவில்லை. காந்தியடிகள் உங் கள் இஷ்டம்போல் செய்யுங்கள் என்று டில்லியிலிருந்து வார்காவுக்குப் போய்விட்டார். காங்கிரஸ் கமிட்டியார் கேசப்பாதுகாப்பு விஷயத்தில் வறிம்சைமுறையைப் பின் பற்றத் தயாராயிருந்தது கிரிப்ஸ்-க்கு நன்றாய்த் தெரியும்.

காங்கிரஸ் கெடுத்துவிட்டதாகக் கூறுகிருரே, அவர் எதைக் கொடுக்கத் தயாராயிருந்தார் ? அவர்கள் எப் படிக் கெடுத்துவிட்டார்கள் ?

கிரிப்ஸ் முதலில் தேசீய மந்திரிசபை அமைப்பதாக வாய்ப் பாயஸம் காய்ச்சினர். அவர்க்கு அப்படிக் கூற

563–6