பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பொழுது புலர்ந்தது

இக்கட்டான வேளையில் எங்களையும் எங்கள் சேனேகளே யும் போகச் சொல்லுகிருரே, இது சாத்தியமான காரியமா என்று உலகத்துக்குப் பறைசாற்ற ஆரம்பித்தார்கள்.

காந்தி அடிகள் பிரிட்டிஷ் ஜனங்களையும் பிரிட்டிஷ் அமெரிக்கத் துருப்புக்களையுமா போகச் சொன்னர், போகச் சொன்னது பிரிட்டிஷ் அதிகாரத்தைமட்டும் தானே ?

சர்க்கார் கூறுவது சரியா என்று கேட்டபொழுது காந்தி அடிகள் “ பிரிட்டிஷ் துருப்புக்கள் இருக்க வேண்டியது அவசியமே, ஆல்ை அவர்கள் நமது யஜமா னர்களாக இராமல் சுதந்திர இந்தியாவின் நண்பர் களாகவே இருக்க வேண்டும் ‘ என்று தெளிவாக சந்தே கத்துக்கிடமில்லாதபடி பதிலெழுதினர். அதுபோலவே நேருவும் இந்தியாவை விட்டுப் போங்கள் என்னும் சொற்றாெடரின் பொருளே விளக்கினர்.

அதுமட்டும் அன்று. லூயி பிஷர் காந்தி அடிகளைப் பார்க்கப் போயிருந்தபொழுது மகாத்மாவின் காரியதரிசி, மகாத்மா வைசிராயைத் சக்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பிஷரும் வைசிராயிடம் அது விஷயத்தைத் தெரிவித்தார். ஆனல் வைசிராய் சும்மா யிருந்து விட்டார்.

அதன்பின் காந்தியடிகள், இவ்விஷயத்தில் தலையிட்டு ஒழுங்கு செய்யுமாறு வேண்டி ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினர். நேச தேசங்களில் ஒன்றாகிய சைன வின் சேனதிபதி சியாங்கே ஷேக்குக்கு யார் தாக்கி லுைம் எதிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஆல்ை அடிமையாய் இருக்கும்வரை அப்படிச் செய்ய முடியாது “ என்று எழுதினர்.

ஏதேனும் சமரசமாக நடைபெருதா என்று காந்தி யடிகளும் காங்கிரஸ் கமிட்டியாரும் ஒரு மாத காலம்