பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகஸ்டு தீர்மானம் 89

எதிர் பார்த்துக்கொண்டு கின்றார்கள். ஆனல் சர்க்கார் இந்திய மக்களைச் சமாதானப் படுத்த யாதொன்றும் செய்யாமல் இருந்துவிட்டார்கள்.

ஆதலால் 1942 ஜூலை மாதம் 15-ந் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டியார் வார்தாவில் கூடி இந்தியாவுக்கு உடனே பூரண சுதந்திரம் கேட்பதாகவும், இல்லையானல் சமூக சாத்வீக சட்டமறுப்புப் போர் நடத்த காந்தியடி களுக்கு அதிகாரம் கொடுப்பதாகவும் தீர்மானம் கிறை வேற்றினர்கள். அதை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியார் ஆகஸ்ட் 8-ம் தேதி பம்பாயில் கூடி ஊர்ஜிதம் செய்தார்கள். இதுவே சர்க்கார் இடை விடாது ஸ்மரித்து வரும் “ ஆகஸ்டுத் தீர்மான ‘மாகும்.