பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காங்கிரஸ் சிறைவாசம்

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியார் ஆகஸ்ட் தீர்மானம் செய்த மறுநாள் காலே விடியுமுன், காந்தி யடிகளும் காரியக் கமிட்டியாரும் கைதி செய்யப்பட் டார்கள். இப்படித் திடீரென்று கைதி செய்ததின் காரணம் அவர்கள் கிறைவேற்றிய தீர்மானந்தான் என்று அரசாங்கம் கூறுகின்றது. அப்படி அதில் சர்க்கார்க்கு விரோதமான காரியம் ஏதேனும் உண்டா?

தீர்மானத்தில் (1) பூரண சுதந்திரக் கோரிக்கை, (2) சட்ட மறுப்பு ஆரம்பிக்க காந்தியடிகளுக்கு அதிகாரம் என்று இரண்டு பாகங்கள் உள.

பூரண சுதந்திரக் கோரிக்கையாவது:-இந்தியாவைத் தாக்க வருபவர்களே எதிர்க்கக்கூடிய சக்தியை வளர்க்க வும், ஜனங்களுக்கு சர்க்காரிடம் கல்லெண்ணம் உண் டாகுமாறு செய்யவும், சகல தேசங்களுக்கும் சுதந்திரம் கிடைப்பதற்காக நேச தேசங்களுடன் இந்தியாவும் ஒரு நேசதேசமாகச் சேரவும், உடனே இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பதாக பிரிட்டிஷ் சர்க்கார் பிரகடனம் செய்யவேண்டும். அது உண்மை என்று காட்ட பெரிய கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டு தேசிய சர்க்கார் அமைத்து போரை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு தேசத்தின் சக்திகளை எல்லாம் திரட்டும்படி செய்யவேண்டும்.

இதுதான் காங்கிரஸ் கோரிக்கையின் சாரம். காங்கிரஸ் தலைவர் பூரண சுதந்திரம் இனிமேல் தருவ