பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் சிறைவாசம் 91.

தாகச் சொன்னல் போதாது, இப்பொழுதே தந்துவிட வேண்டும், அதைத் தந்துவிட்டால் நாம் உடனே நேச தேசத்தாருடன் ஒரு நேச தேசமாகச் சேர்ந்துகொள் வோம்’ என்று கூறினர்.

பண்டித நேரு-” நானும் துப்பாக்கி எடுத்து ஐப் பானே எதிர்க்கத் தயார், ஆளுல் சுதந்திர புருஷைைல் தான் அப்படிச் செய்ய ஆற்றல் வரும்’ என்று கூறினர். இவ்விதமாகப் பூரண சுதந்திரம் கேட்டது தவரு ? பூரண சுதந்திரம் நமது திலக மகரிஷி கூறியதுபோல ஒவ்வொரு தேசத்தார்க்கும் பிறப்புரிமை அல்லவா ? அத்துடன் காங்கிரஸ் அதுதான் எங்கள் லட்சியம் என்று இன்று கேற்று கேட்கவில்லையே, சென்ற இருபத்தைந்து வருஷ காலமாகக் கூறுவது சர்க்கார்க்கும் தெரியுமே. அரசாங்கமும் 1919-ம் வருஷத்து அரசியல் சட்டத்தி லேயே பூரணமான பொறுப்பு வாய்ந்த அரசியலுக்கு வழி கோலுவதாகக் கூறவில்லையா? இப்பொழுது கிரிப்ஸ் வந்து, இஷ்டப்பட்டால் பிரிந்து கொள்ளும் உரிமை யுடைய டொமினியன் அந்தஸ்து தருவதாகக் கூற வில்லையா? அதுவுந்தவிர அட்லாண்டிக் சாஸனம் சகல தேசங்களும் சுதந்திரம் பெறுவதற்காகவே போர் நடப்ப தாகக் கூறுகிறதே, அப்படியால்ை இந்தியா மட்டும் சுதந்திர தாகம் கொள்ளக் கூடாதா?

இப்பொழுது உடனே அரசியல் அமைப்பை நிர்மா னித்துவிட வேண்டும் என்று கேளாமல் போரை வெற்றி கரமாக கடத்தக் கூடிய தற்காலிக கூட்டு மந்திரி சபை தானே ஏற்படுத்தும்படிக் கோருகிறது. அதிலும் குற்றம் உண்டா ?

சர்க்கார் காந்தி அடிகளையும் காங்கிரஸ் தலைவர் களேயும் இந்த இரண்டு காரணங்களுக்காக கைதி செய் திருக்க முடியாது.