பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 99

முடியவில்லை. அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது. கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் மறுமொழி கூற முற்பட்டான். ஆனால் தொண்டை அடைத்துவிட்டது. சிறிது நேரத்திற்குப்பின் அவன் மெல்லப் பேசலானான்:

‘உற்றார் அனைவருக்கும் துக்கத்தை அளித்துத் தாங்கள் செய்யும் காரியத்தால், சேறு நிறைந்த கசத்தில் வீழ்ந்த யானைபோல், என் உள்ளம் தத்தளிக்கிறது. இரும்பு நெஞ்சு உடையவர்களையும், தங்களுடைய பிடிவாதமான செயல் அழவைத்துவிடும். அப்படியிருக்கையில், அன்பினால் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் இத் துன்பத்தை எவ்வாறு தாங்க முடியும்!

‘அரண்மனையில் இருக்கவேண்டிய உங்களுடைய மலர்போன்ற மெல்லிய உடல் தருப்பைப் புல் நிறைந்த காட்டுத் தரையில் எப்படிப் படுத்திருக்க முடியும்!

‘நகரிலே தாங்கள் அழைத்தவுடன் நான் குதிரையைக் கொண்டு வந்தேன். கொண்டு வந்தது நானல்ல–விதி தான் என்னை அப்படிச் செய்யும்படி உந்தியிருக்க வேண்டும். அதற்குப் பின்னால், இப்போது மறுபடி குதிரையைக் கொண்டு நான் நகருக்குள் எப்படித் திருப்பிச் செல்ல முடியும்? கபிலவாஸ்து முழுமைக்குமே சோகம் விளைவிக்கும் செய்தியுடன் திரும்பிச் செல்ல என் மனம் எப்படி இசையும்?

தேடுதற்கு அரிய திரவியமாக எண்ணித் தங்களைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வந்த வயோதிகத் தந்தையின் அன்பை எண்ணிப் பாருங்கள்! முகத்தின் மேல் முகம் வைத்து முத்தாடி உங்களை வளர்த்த சிற்றன் னையைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! நற்குணங்கள் அனைத்தும் பொருந்திய தங்கள் தேவியை எண்ணிப்