பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ⚫ போதி மாதவன்

பாருங்கள்! அறத்தின் நிலையமாகவும், புகழின் புகலிடமாகவும் விளங்கும் தாங்களே யசோதரையின் இளங் குமரனைக் கைவிடத் துணியலாமா?

‘நாட்டையும் நகரத்தையும் உற்றோரையும் பெற்றோரையும் கைவிடத் துணிந்தது ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் பாதங்களைத் தவிர வேறு சரணில்லாத என்னைக் கைவிடுவது நியாயமா?

‘என் உயிரே தீயில் வெந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் உங்களைக் கொடிய கானகத்திலே விட்டுவிட்டு நான் ஊருக்குத் திரும்புதல் இயலாது.

‘நான் மட்டும் நகருக்குத் திரும்பினால், அரசர் என்னை என்ன சொல்லுவார்? “என்ன செய்தி?” என்று தங்கள் தேவி என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்லி வாழப் போகிறேன்!

‘என்னிடம் கருணை காட்டுங்கள்; உடனே திரும்பி வாருங்கள்!’

பேரன்பு கொண்டவர்களைப் பிரிவது அரிது என்பதை .உணர்ந்த சித்தார்த்தர், அவனுக்கு மேலும் பல நீதிகளை எடுத்துரைக்கலானார்: ‘பந்துக்களிடம் பாசம் வைத்து நான் இப்போது மீண்டு வந்தாலும், பின்னாலும் ஆள் பார்த்து உழலும் கூற்று எங்களைப் பிரிப்பது உறுதி. இன்னும் எத்தனை எத்தனையோ பிறவி யெடுக்க வேண்டிய ஜீவன்களுக்கு மரணம் இயற்கையல்லவா? என்னைப் பெற்றெடுத்த தாயை எண்ணிப்பார்! இப்போது அவள் எங்கே, நான் எங்கே இருக்கின்றோம்? எங்களுக்குள் என்ன தொடர்பு இருக்கிறது? பறவைகள் கூடுகளை விட்டுப் பறந்து செல்லுதல்போல, எல்லா உயிர்களும் உடல்களை விட்டுப் பறக்கவேண்டியவைகளே : உயிர்கள் கூடுதலும் பிரிதலும் வானத்திலே மேகங்கள்