பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 ⚫ போதி மாதவன்

இலட்சியமாய்க் கொள்வது மட்டும் ஏன் புண்ணியமாகாது? தண்ணீரைத் தெளித்து விட்டு, “இது புனிதத் தலம்!’ என்று கூறுவதால், ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத் தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சியே யாகும் தண்ணீரால் பாவத்தைக் கழுவமுடியாது. தண்ணீர் தண்ணீரே தவிர வேறில்லை. நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால், மீன்களே முதலில் சுவர்க்கத்திகு உரியவை.

‘மனத்தின் போக்கினாலேயே உடல் இயங்குகின்றது. அல்லது இயக்கமின்றி நின்று விடுகின்றது. ஆதலால் சித்தத்தை அடக்குதலே சிறந்த வழியாக இருத்தல் வேண்டும். சிந்தனையை நீக்கி விட்டால், உடல் வெறும் மரக்கட்டைதான்!’

அன்று மாலைவரை முனிவர்கள் பல இடங்களிலே பரவித் தவம் செய்து கொண்டிருந்தனர். அந்தி மாலையில் எல்லோரும் ஆசிரமத்திற்கு வந்து கூடினர். அக்கினி வளர்த்து அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

சித்தார்த்தர் அவர்களோடு சில நாட்கள் தங்கியிருந்து விட்டு, அவர்களுடைய தவமுறைகளை அறிந்து கொண்ட பின், அங்கிருந்து வேறிடம் செல்ல வேண்டும் என்று கருதினார். முனிவர்கள் அவர் பிரிந்து செல்வதைப் பொறுக்க முடியாமல், தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர் பிரிவு ‘உடலிலிருந்து ஆவி பிரிவது போலிருக்கிறது!’ என்று கூறினார் பார்க்கவர்.

சித்தார்த்தர் அவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறினார். உங்களுடைய உபசார மொழிகள் அன்பினால் என்னை நீராட்டியது போல் இருக்கின்றன. முன்னால் தருமத்தைப் பற்றிய கருத்து எனக்குத் தெளிவாகிய சமயத்தில் எவ்வாறு ஆனந்த முண்டா-