பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 117

சித்தார்த்தருடைய இந்தத் துறவுபற்றி ‘மஜ்ஜிம நிகாயம்-அரிய பரியேசன’ சூத்திரத்தில் அவரே கூறி யுள்ள வாசகம் வருமாறு:

பின்னர், சீடர்களே! சிறிது காலம் கழித்து, நான் மேலும் இளமையோடு, கறுப்புக் கேசமும் வாலிபப் பருவமும் கொண்டிருக்கும் போதே, மானிட வாழ்வின் நல்ல நடு வயதிலேயே, என்னுடைய தாய் தந்தையரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதையும் பாராமல், நான் என்னுடைய தலை முடியையும், தாடி மீசைகளையும் அழித்து விட்டு, காஷாய ஆடையை அணிந்து, மனை வாழ்க்கையை விட்டு மனையற்ற வாழ்க்கையில் புகுந்தேன்.[1]


  1. பிக்கு சோமானந்தருடைய ‘புத்தர் சரித்திரம்’ பார்க்கவும்.