பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ⚫ போதி மாதவன்

யும் வதைத்துக் கொள்ளுகிறான் என்று கருதினார் கௌதமர்.

அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில், கொடுரமாகக் காய்ந்து சொண்டிருக்கும் வெய்யிலிலே, மலைகளிலிருந்து ஓர் ஆட்டுமந்தை வந்து கொண்டிருந்தது. இரு நூறு ஆடுகள் இருக்கும்; அவைகள் புதர்களை நாடி ஓடாமல் இரண்டு ஆயர்கள் அவைகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். வழக்கமாக ஆடுகள் மாலை நேரத்திலேயே மலையிலிருந்து திரும்புவது வழக்கம். நண்பகலிலே அவைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்ட கௌதமர், அவைகள் எங்குச் செல்லுன்றன என்று ஆயர்களிடம் கேட்டார்.

பிம்பிசார மன்னர் அன்று நடத்தும் வேள்விக்காக அந்த ஆடுகளையெல்லாம் அழைத்துச் செல்வதாக ஆயர்கள் கூறினர். அன்று மாலையோடு யாகம் முடிவடைவதாயும் தெரிவித்தனர்.

அஜமேத, அசுவமேதம், நரமேதம் முதலிய எத்தனை வித யாகங்கள்! மனிதன் தான் பாவங்களையெல்லாம் வேறு ஜீவன்களின் மீது ஏற்றி, அவைகளின் தலைகளை வெட்டித் தெய்வங்களுக்குப் பலியளித்தால், தன் பாவங்கள் ஒழிந்து பேரின்பம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்திலே அவரவர் பாவ புண்ணியங்களை அவரவர் அனுபவித்துத் தீரவேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்த கௌதமர், வாயில்லாப் பிராணிகளான ஆடுகளைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். அவைகள் தங்கள் தலைகளைக் கொலை வாளுக்கு இரையாகக் கொடுப்பதற்காகக் காட்டு வழியாக விரைந்து சென்று கொண்டிருந்தன, உயிரில் அவைகளுக்கு எவ்வளவு ஆசையிருந்தது! சாலையின் இரு புறத்தும் இருந்த செடிகளையும் தழைகளையும் உண்டு