பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 11

கபிலரின் உதவியால் அந்நகரை அமைத்து ஆண்டுவந்த தாகக் கூறப்படுகிறது. கபிலரின் நினைவு நீங்காதிருப்பதற்காக அந்தக் கடிநகருக்குக் கபிலவஸ்து[1] அல்லது கபிலை என்று பெயரிடப்பட்டது.

நீல முடி தரித்த பல மலைகளுக்குத் தென்பால், சால மரங்களும், ஆலமரங்களும், மற்றும் பல அழகிய காட்டு மரங்களும் அடர்ந்த குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த சமவெளியில் அந்நகரம் அமைந்திருந்தது. எங்கனும் நறுமணம் வீசும் ஜவந்தி, தகரம், பத்திரம், ஜம்பு, அசோகம் முதலிய மலர்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தெளிந்த நீருள்ள நீர்நிலைகள் பலவற்றிலும் தாமரை, குமுதம் போன்ற மலர்கள் நிறைந்திருந்தன. ஏரிகளின் கரைகளிலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் கொத்துக் கொத்தான பூக்களுடன் ஏரிகளுள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த வனங்களில் மான்களும், யானைகளும், சிங்கங்களும் ஏராளமாகத் திரிந்து கொண்டிருந்தன. அருகே உரோகிணி ஆறு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை அவதரிக்கும் புத்தர் தன் மடிமீது வந்து தவழப் போகிறார் என்ற செருக்குடன், ஆனந்தமாக ஆடிப் பாடி ஆரவாரம் செய்து ஒடிக் கொண்டிருந்தது. இத்தனை இயற்கை அழகுக்கும் நடுவே, விண்ணை மூடிக்கொண்டு உயர்ந்து நின்ற கோட்டை கொத்தளங்களும், அரண்மனைகளும், மாளிகைகளும், விசாலமான வீதிகளும், கடைத் தெருக்களும், நகரை அணி செய்து கொண்டிருந்தன.

சுத்தோதன மன்னர்

இன்றைக்கு 2,500 ஆண்டுகட்டு முன் அத் திருநகரில் அமர்ந்து அரசு புரிந்துகொண்டிருந்த மன்னர்


  1. கபிலவாஸ்து – கபிலர் இடம்.