பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ⚫ போதி மாதவன்

சுத்தோதனர். அவர் கெளதம கோத்திரத்தைச் சேர்ந்தவர் அக்காலத்து அரசர் பலரும் தம் குல குருவின் கோத்திர்த்தையே தம் கோத்திரமாகக் கொண்டிருந்தனர். மல்லர்கள் வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். சுத்தோதனர் ஆட்சியில் அறம் நிலைத்து றின்றது; தானமும் தருமமும் பல்கி வளர்ந்தன. மக்கள் பலவகைச் செல்வங்களையும் பெற்றுப் பயமின்றி வாழ்ந்து வந்தனர். நீதி வழுவாத நெறிமுறையால் எங்கணும் இன்பம் கொழித்துக்கொண்டிருந்தது.

சுத்தோதன மன்னருக்கு சுக்கிலோதனர், தெளதோதனர், அமிருதோதனர் என்ற மூன்று சகோதரர்களும், அமிருதை, பிரமிதை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்[1]. அவருக்கு மாயாதேவி, கௌதமி[2] என்ற இரு மனைவியர் இருந்தனர். இவர்கள் கோலிய மன்னர் அஞ்சனரின் குமாரிகள் இவர்களுடைய அன்னையின் பெயர் யசோதரை. அஞ்சனர் கபிலவாஸ்துவின் அருகேயிருந்த தேவதாக நகரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்.

பட்டத்து ராணியான மாயாதேவி பேரழகும் பெருங்குணமும் பெற்றிருந்தாள். திருமகள்போல் எழிலுள்ள


  1. சுத்தோதனர் சிம்மஹணு மன்னரின் மூத்தகுமாரர். அவருடன் பிறந்த சகோதரர்கள் நால்வரென்றும், சகோதரிகள் நால்வரென்றும் சில வரலாறுகளில் காணப்படுகிறது.
  2. இவர்கள் சாக்கிய சுப்ரபுத்தரின் குமாரிகளென்றும், மாயா மூத்த மகளென்றும், கௌதமி கடைசி மகளென்றும், இவர்களுடைய சகோதரிகள் அறுவரைச் சுத்தோதனரின் சகோதரர்கள் மூவரும் தலைக்கு இரு மனைவியராக மணந்துகொண்டனரென்றும் பலவிதமான வரலாறுகள் உண்டு. கௌதமிக்கு மகா பிரஜாவதி என்றும் ஒரு பெயருண்டு.