பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ⚫ போதி மாதவன்

தூல உடலும், மன ஆற்றல்களும் அந்தச் சேர்க்கையின் விளைவுகளே. படிப்படியான பரிணாம வளர்ச்சியால் தோன்றியுள்ள குணங்களைக் கொண்டு அவை ஏற்பட்டிருக்கின்றன. பொறிகளின் தொழில்களுக்கு மூலமாயுள்ள ஐம்புலன்களும் இத்தொழில்களைச் செய்து வந்த முன்னோர்களிடத்திலிருந்து எனக்கு வந்துள்ளன. என் சிந்தனைகள் அவைகளைச் சிந்தித்த மற்றையோரிடமிருந்தும், என் மனத்தில் எழும் சிந்தனைகளோடு அவைகள் கலந்தும் ஏற்படுகின்றன. பல ஸ்கந்தங்களின் சேர்க்கையால் நான் தோன்றுவதற்கு முன்பு, இதே புலன் களைப் பயன்படுத்திக் கொண்டும், இதே சிந்தனைகளைச் சிந்தித்துக் கொண்டும் இருந்தவர்கள் எவர்கள்? முந்திய பிறவிகளில் தோன்றிய நானே அவர்கள்; நேற்றைய நான் இன்றுள்ள நானுக்குத் தந்தையாவது போல, அவர்களே என் முன்னோர்கள்; என் முந்திய செயல்களின் கருமம் இப்போதுள்ள என் வாழ்க்கையின் விதியை நிர்ணயிக்கின்றது.[1]

‘புலன்களின் செயல்களை இயக்கி வரும் ஆன்மா ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், பார்வையின் வழியாக உள்ள கண்களைப் பறித்து எடுத்து விட்டால், அந்த ஆன்மா உலகத்தில் தெளிவாகத் தடையின்றிப் பார்க்க முடியுமோ? செவிகளைப் பிய்த்து எடுத்துவிட்ட பிறகு, அது ஒலிகளை மேலும் தெளிவாகக் கேட்க முடியுமோ? நாசியை வெட்டிய பிறகு, அது நாற்றங்களை மேலும் தெளிவாக முகர முடியுமோ? நாவை வெளியே இழுத்து விட்டால், அது மேலும் தெளிவாகச் சுவையை உணர முடியுமோ? உடலை அழித்து விட்டால், அது மேலும் சுகத்தை அடைய முடியுமோ?[1]

‘குணம்(பண்பு) நிலைத்து நிற்பதோடு, பின் எடுக்கும் ஜன்மங்களிலும் தொடர்ந்து செல்வதை நான் காண்-


  1. 1.0 1.1 மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன்ஹா )