பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 145

வழக்கம். பல நாட்களாக உட்காராமல் நின்று கொண்டேயிருந்து பழகினார். முட்களைப் பரப்பி அவற்றின் மீது படுத்துப் பழகினார். நாள்தோறும் மூன்று வேளை குளித்துத் தண்ணீர்க்குள்ளேயே நெடுநேரம் இருப்பதுப் வழக்கமாயிற்று.

உடலைப் பொருட்படுத்தாமல் வதைப்பதில் எத்தனை முறைகள் உண்டோ அத்தனையையும் அவர் செய்து பார்த்தார். மாதக்கணக்காக அவர் குளியாமலேயே இருந்தார். மரப்பட்டை போல உடலில் அழுக்கு அடையாக ஏறியிருப்பினும், அதைக் கைகளால் நீக்க வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமலே இருந்தார். பிறர் அவ்வுதவியை செய்யவேண்டும் என்றும் அவர் நாடவில்லை.

உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படினும் அவர் எப்பொழுதும் போல் கருணையை மட்டும் கைவிடவே யில்லை. ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் கூடத் தம்மால் துயருறாமல் இருப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்

ஏகாந்தமாக இருக்கவேண்டும் என்று தோன்றிய காலங்களில், அவர் இரவும் பகலும் புதர்களுக்குள்ளே போய் மறைந்திருப்பது வழக்கம். பழக்கமில்லாதவர்கள் அந்தப் புதர்களைக் கண்டாலே மயிர்க் கூச்செறியும் என்று அவரே கூறியுள்ளார். புல்லறுக்கவும், மரம் வெட்டவுப் மாடுகள் மேய்க்கவும் வரக்கூடிய மனிதர்கள் தம்மைப் பார்த்துவிடாமலும், தாம் அவர்களைப் பார்த்து விடாமலும் இருப்பதற்காக, அவர் காலோசை கேட்டதுமே தொலை தூரங்களுக்கு ஓடி போய் விடுவார் கோடை காலத்தில் வெய்யிலிலே காய்ந்தும், குளிர், மழை காலங்களில் திறந்த வெளியில் கிடந்தும், வெயிலால்