பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 149

கிடப்பது போலக் காணப்பட்டன. போஷிப்பு இல்லாததால் கண்ககள் குழி விழுந்து போயின. ஆழமான கிணற்நிலன் அடியில் தண்ணீர் தெரிவது போல் அவைகள் பள்ளத்தில் வீழ்ந்திருந்தன. காற்றிலும் வெயிலிலும் காய்ந்த கும்மட்டிக்காய் சுருங்காது போல், என் தலையின் தோல் வாடிச் சுருங்க விட்டது. போஷிப்பில்லாததாலேயே! இப்படி நேர்ந்தது.

வயிற்றின் தோலைத் தொட்டுப் பார்க்கலாம் என்று பார்த்ததில், கையில் என் முதுகெலும்பு தட்டுப்பட்டது. முதுகெலும்பைத் தொட்டுப் பார்க்கலாம் என்று பார்த்தால், என் வயிற்றின் தோல் அகப்பட்டது. வயிறும் முதுகும் அப்படி ஒன்றோடொன்று ஒட்டிப் போய்விட்டன.

‘மல மூத்திரம் கழிக்கலாம் என்று எழுந்திருந்தபோது, அப்படியே அதேயிடத்தில் நான் சுருண்டு விழுந்ததுவிட்டேன். . அங்கங்களைத் தடவிக் கொடுக்கலாம் என்று தடவுகையில், உடலின் ரோபங்கள் முளையோடு கிளம்பி உதிர்ந்து விட்டது. இவையெல்லாம் போஷிப்பினமையால் ஏற்பட்டன.’

பொன்மயமான அவருடைய நிறமும் மாறிக் கறுத்து விட்டது. உடலின் பரிசுத்தமும் பளபளப்பும் நீங்க விட்டன.

அப்போது கௌத்தமர் எண்ணியவதாவது: ‘பழங் காலத்துத் தபசிகளும், பிராமணர்களும் அநுபவித்த கூர்மையான, வேதனையான, துக்ககரமான, கொடூரமான துன்ப உணர்ச்சிகளைப் பார்க்கிலும் எனக்கு ஏற்பட்ட