பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 151

தவன் உண்மை ஞானத்தைப் பெற முடியாது. பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் வாடிய ஒருவன் மன நிலை குலைந்து பின் சாந்தியோடிருக்க முடியாது; பூரணமான அமைதியைப் பெற்றாலன்றி, மனத்தினாலேயே அடைய வேண்டியதாயுள்ள முடிவை அவன் எப்படி அடைய முடியும்? புலன்களை இடை விடாமல் திருப்தி செய்யத்தான் வேண்டியிருக்கிறது: அவைகளை அமைதியாக வைத்துக் கொண்டாலே சித்தமும் தன்னிலையில் நிற்கும். அமைதியுற்ற மனமே தியானத்திற்கு ஏற்றது; தியானத்தின் மூலமே அடைவ தற்கு அரிய, ‘அழிவற்ற, நிலையான சாந்தியை அடைய முடியும்!’[1] என்று அவர் முடிவு செய்தார்.

வீணையின் தந்திகள் அதிகமாக முறுக்கேறினால் அறுந்துபோம்: அதிகமாக நெகிழ்ந்திருந்தால் அவற்றில் இசை பிறக்காது; ஆதலால் அவற்றை முறுக்கேற்றாமலும், நெகிழவிடாமலும் நடுநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதுபோல், உடலாகிய வீணையையும் நிதான நிலையில் வைத்துக் கொண்டாலே அறிவாகிய இன்னிசை பிறக்கும் என்பது அவருக்குத் தெளிவாகி விட்டது. இந்தத் தெளிவே பிற்காலத்தில் அவருடைய பௌத்த தருமத்திற்சூ அடிப்படையான தத்துவமாக அமைந்தது. இதனாலேயே இவருடைய தருமத்திற்கு ‘நிலையான மார்க்கம்’ என்ற கருத்துள்ள ‘மஜ்ஜிம படி பதா’ என்ற பெயருண்டாயிற்று.

மெல்ல மெல்ல நடந்து அவர் நைரஞ்சரை நதியை அடைந்து நீரில் குளித்தார். ஆனால் உடல் நைந்து துவண்டிருந்ததால், அவர் நீரை விட்டு வெளியே கரையேற முடியவில்லை. அருகேயிருந்த மரக் கொப்புக்களைப்


  1. அசுவகோஷரின் ‘புத்த சரிதை’