பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 159

களும் அசைவற்று அமைதியாக நின்றன. வானத்திலே மட்டும் மகிழ்ச்சி ஒலிகள் எழுந்தன. மக்களுக்கு ஆசையூட்டி மயக்கும் சீல விரோதியாகிய மாரன் சாக்கிய முனிவரின் கொடிய உறுதியைக் கண்டு கலக்கமடைந்தான். அவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் அவர் உபதேசம் கேட்டு மக்கள் அனைவரும் நன்னெறிகளில் நின்று விடுவர். அதனால் அவனுக்கு வேலையில்லாமற் போகும். ஆதலால் அவருடைய முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் அரச மரத்தை அணுகி வந்தான்.

‘மரணத்தைக் கண்டு அஞ்சும் க்ஷத்திரிய வீர! எழு வாய், எழுவாய்! முக்தி வழியைக் கைவிட்டு எழுவாய்! எழுந்து, இவ்வுலகையும், இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய்! ஆண்டியாக வாழ்தல், உன் உன்னத மரபுக்கே இழுக்காகும்; குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன்!’ என்று முழக்கிக் கொண்டு, அவன் முனிவர் முன்பு தோன்றினான்.

கௌதமர் நிலையில் மாற்றம் காணாமையால் அவன் கையிலிருந்த மலர் அம்பினைத் தொடுத்து அவர் மீது எய்தான். அவர் அசையவில்லை.

அதன் பின்னர் அவன் தன் படையினங்களை அவர் மீது ஏவினான். கரடிகள், திமிங்கிலங்கள், குதிரைகள், கழுதைகள், ஓட்டைகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், ஒற்றைக் கண்ணும் பல தலைகளுமுள்ள விலங்குகள், பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன. வானம் இருண்டது. திசைகள் கறுத்தன. புயல் எழும்பிற்று. ஆனால் பாறைகளையும் மரங்களையும் பறித்-