பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 ⚫ போதி மாதவன்

பயன்களாக மூப்பு, பிணி, மரணங்களும் இல்லை. துக்கத்தை அடியோடு நீக்க இதுவே வழி.

புத்தர்

இவ்வாறு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கௌதமருக்குப் புலனாகிக் கொண்டிருந்தன. திரைமேல் திரையாக அறியாமைத் திரைகள் அற்றொழிந்தன. அவித்தையின் தோடு உடைந்து சிதறி, கோடிக் கிரகணங்களுடன் பொன் மயமான மெய்யறிவுச் சூரியன் அவர் அகத்திலே உதயமாகி விட்டான். அவர் இனி அறியவேண்டியது எதுவுமில்லை. அன்றிரவு பொழுது விடியுமுன்னே, கௌதமபிக்கு போதியடைந்து. புத்தராகி விட்டார்! அவர் திருமுகத்தில் பூரண ஞானம் பொலிந்து விளங்கிற்று. அவர் பவம் ஒழிந்த பகவராகி விட்டார்! அகங்காரமற்ற தவ ராஜராகி விட்டார்! அறமுணர்ந்த தருமராஜராகி விட்டார்! அவரே ததாகதர்!

தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். தென்றல் இனிமையாக வீசிற்று. மண்ணகமெல்லாம் மகிழ்ச்சி வடைந்தது தேவர்கள், நாகர்கள் அனைவரும் தத்தம் உலகிலிருந்து போதி மரத்தடியில் வந்து சினேந்திரரை வணங்கிச் சென்றனர். மாரன் ஒருவனே மனத்துயர் கொண்டான்.

புத்தர் கூறினார்.

‘ஆசைத் தளையால் கட்டுண்டு நெடுங்காலம் அலைந்து திரிந்து, இதுவரை எத்தனையோ பிறவிகளெடுத்துக் களைத்து விட்டேன்!

‘பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்று–இந்த (உடலாகிய) குடிலைக் கட்டிய-