பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 ⚫ போதி மாதவன்

‘ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை பற்றிய உயரிய வாய்மை இது.

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது:

‘உண்மையில், எனது வேட்கை சம்பந்தமான காமிய உணர்ச்சி எதுவும் எஞ்சியிராமல் அழித்து விடுதலே இது (துக்க நீக்கம்). இந்த வேட்கையை ஒதுக்கி உதறித் தள்ளி விட்டு, இதிலிருந்து அறவே விடுதலையாகி, (உள்ளத்தில்) இது தங்கு வதற்கு இடமேயில்லாமற் செய்தலாகும்.

ஓ பிக்குக்களே! இதுவே துக்க நீக்கம் பற்றிய வாய்மையாகும்.

‘ஓ பிக்குக்களே! இதுவே துக்க நீக்கத்திற்கு உரிய மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது. உண்மையில், இது அஷ்டாங்க மார்க்கமே. அதாவது:

நற்காட்சி

நல்லூற்றம்

நல்வாய்மை

நற்செய்கை

நல்வாழ்க்கை

நல்லூக்கம்

நற்கடைப்பிடி

நல்லமைதி

ஆகிய எட்டுப் படிகள் உள்ள வழி.

‘ஓ பிக்குக்களே! துக்கநீக்க மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது.

‘ஓ - பிக்குக்களே! துக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந் திருக்கவில்லை; ஆனால் (அதைக் கண்டுகொள்ளக் கூடிய ஞானமாகிய) கண் என்னுள்ளே தோன்-