பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 185

சிரமணர்கள், பிராமணர்களுடைய குலம் முழுவதிலும் தன்னிகரற்று விளங்கக்கூடிய அந்த மெய்ஞ்ஞானம் பற்றிய உள்ளுணர்வை நான் பூரணமாகப் பெற்றேனோ என்பது எனக்குச் சந்தேகந்தான்.

‘ஓ பிக்குக்களே! இந்த மூன்று வரிசைகளாக நான்கினில் ஒவ்வொன்றைப் பற்றியும், எனது அறிவும் உள்ளுணர்வும் தெளிவு கொண்டவுடனே, வான மண்டலங்களிலும் அல்லது பூமியிலும், சிரமணர்கள், பிராமணர்களுடைய குலம் முழுவதிலும், அல்லது தெய்வங்கள், மனிதர்களிடத்திலும் தன்னிகரற்று விளங்கக்கூடிய அந்த மெய்ஞ்ஞானம் பற்றிய உள்ளுணர்வை நான் பூரணமாகப் பெற்றுவிட்டேன் என்பது எனக்கு நிச்சயமாயிற்று.

‘ஆகவே இப்பொழுது இந்த அறிவு–இந்த உள்ளுணர்வு–என்னுள்ளே எழுந்துள்ளது. என் இதயத்தின் விடுதலை அசைக்க முடியாதது. இதுவே எனது இறுதிப் பிறவி. இனி எனக்குப் பிறவியில்லை !’[1]


  1. புத்தர் பெருமான் மெய்ஞ்ஞானம் பெற்றபின் நிகழ்த்திய இந்த முதற் சொற்பொழிவு ‘அங்குத்தர நிகாயம்–தர்ம சக்ரப் பிரவர்த்தன சூத்திர’த்திலுள்ளது. இதன் எளிமையும், தெளிவும், திட்ப நுட்பமும் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கவை. ஒருமுறை பார்த்ததும் சிலர்க்கு, ‘இது இவ்வளவு தானா!’ என்று கூடத் தோன்றலாம். எதிரேயிருந்து உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து சீடர்களும் சகல சாத்திரங்களையும் கற்றுப் பல்

போ–12