பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 ⚫ போதி மாதவன்

‘பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை’
[1]

மேலே கூறப்பட்டுள்ளது. இதுவே ‘தரும சக்கரப் பிரவர்த்தனம்’ என்று புகழப் பெறும் புத்த பகவர் அற ஆழி உருட்டிய வைபவம்! சத்திய சாம்ராஜ்யத்தின் தர்ம சக்கரம்–அற ஆழி–இனி நில்லாது சுழன்று கொண்டே யிருக்கும்!

தரும சக்கர மகிமை

பரிசுத்தமான ஒழுக்க விதிகளே அந்தச் சக்கரத்தின் ஆயக்கால்கள்; அவைகள் ஒரே நீளமுள்ளவையாயிருத் தலே நீதி; ஞானமே சக்கரத்தைச் சுற்றியுள்ள இருப்புப் பட்டை; அடக்கமும் கருத்துடைமையும் சேர்ந்து அமைந்த குடத்தில் அசைவில்லாத சத்தியமாகிய அச்சு பொருத்தப் பட்டிருக்கிறது.

தரும சக்கரம் பளபளப்பாக ஒளிமயமாயுள்ளது. அதற்கு நடுவுமில்லை, முடிவுமில்லை. போலித் தத்து-


    லாண்டுகளாகத் துறவறத்தில் நிலைத்திருந்தவர்கள், குறிப்பால் விஷயங்களைத் தெளிவுறத் தெரிந்துகொள்ளக் கூடியவர்கள்; புத்தர் மெய்ஞ்ஞானம் பெறும் வரை ஆறு ஆண்டுகள் அவர் அருகில் அவருடனேயே இருந்தவர்கள். ஆதலால் இந்த உபதேசத்தில் அதிக விளக்கங்களோ, உபமானங்களோ, விவாதத்திற்குரிய விஷயங்களோ கூறப்படவில்லை. இந்த உபதேசமே புத்தர் போதித்த பெளத்த தருமத்தின் வித்து எனலாம். பின்னால் புத்தர் தருமப் பிரசாரம் செய்து வந்த 45 ஆண்டுகளிலும் இதையே கூறி வந்ததோடு கேட்போரின் தன்மைக்கு ஏற்றபடி விளக்கங்கள், கதைகள், உபதேசக் கதைகள், கேள்விகள் முதலியவைகளைச் சேர்த்தும் கூறி வந்தார்.

  1. ‘மணிமேகலை’.