பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 ⚫ போதி மாதவன்

உணர்வும் ஆன்மாவற்றது. பிரக்ஞையே ஆன்மாவாக இருந்தால், அது பிணிக்கு உட்படக் கூடாது. பிரக்ஞை சம்பந்தமாக, “என் பிரக்ஞை இப்படியிருக்கட்டும், என் பிரக்ஞை அப்படியிருக் கட்டும்” என்று சொல்லக்கூடியதாக இருக்கும். பிரக்ஞை ஆன்மாவற்றிருப்பதால், பிரக்ஞை பிணிக்கு உட்பட்டிருக்கின்றது அது சம்பந்தமாக, “என் உணர்வு இப்படியிருக்கட்டும், என் உணர்வு அப்படியிருக்கட்டும்” என்று சொல்ல முடியவில்லை.

‘பிக்குக்களே! உடல் நித்தியமான தா, அநித் தியமானதா, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’

‘வேதனையுள்ளது, பகவன்!’

‘ஆனால் அநித்தியமாயும், வேதனையுள்ள தாயும், மாறும் இயல்புள்ள தாயும் உள்ள ஒன்றை, “இது எனது, இது நான், இது எனது ஆன்மா” என்று கருதுதல் தகுமா?’

‘தகாது பகவன்!’

[உடலைப் போலவே உணர்வு, புலனறிவு, ஸ்கந் தங்கள், பிரக்ஞை முதலியவையும் அநித்தியமாயும், வேதனையுள்ளவையாயும், மாறுவன வாயும் உள்ளன என்பதை விளக்கி விட்டுப் புத்தர் மேலும் கூறினார் :]

‘ஆதலால் பிக்குக்களே, இறந்தகாலம், எதிர் காலம், நிகழ்காலம் ஆகிய எந்தக் காலத்திலும் உள்ள எந்த உடலையும் உணர்ந்து கொண்டவன்–அதன் தோற்றத்தைக் கொண்டோ, உள் அமைப்பைக் கொண்டோ, அதன் தூல உருவைக் கொண்டோ, சூக்கும உருவைக் கொண்டோ,