பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ⚫ போதி மாதவன்

வாளென்றும் அவர்கள் கூறியதோடு, அதுமுதல் மாயா தேவியைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துவர வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்கள்.

சுத்தோதனர் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை. கனவை விளக்கிய மறையோர்களுக்கு அவர் ஊணும், உடைகளும், பொன்னும், பூண்களும் பரிசளித்தார். நகர மக்களும் இந்த நற்செய்தியிற் களிக்க வேண்டுமென்று மலர்களையும், மற்ற, மங்கலப் பொருள்களையும், உண்டி களையும், இனிய பானங்களையும், உடைகளையும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்ததோடு, ஆடுகள், குதிரைகள், வாகனங்களைக்கூடத் தானமாக வழங்கினார்.

மேகங்கள் மின்னற் கொடியைத் தம்மகத்தே வைத்துப் பேணுதல்போல மாயாதேவி தன் குலக்கொழுந்தை வயிற்றில் வைத்துப் பேணி வந்தாள். குழந்தையும், சிறிது - சிறிதாக வளராமல், ஆரம்பத்திலேயே முழுப் பருவமும் பெற்றிருந்தது. துன்பமோ துயரமோ இன்றி எந்த நேரமும் மாயா இன்பத்தில் திளைத்திருந்தாள். வாய்மையும் தூய்மையும் அவள் உள்ளத்தை வளஞ் செய்துவந்தன. அவள் நோற்காத நோன்பில்லை, செய்யாத பிரார்த்தனையில்லை. தீயவை யாவும் அவளிருந்த திசையைவிட்டே அகன்றுவிட்டன. பேயும் பிசாசும் அவள் முகவிலாசத்தைக் காண அஞ்சி ஓடி மறைந்தன. அவள் தொட்ட பொருள்களைத் தொட்ட மக்கள்கூட நோய் நோக்காடுகள் நீங்கிச் சுகம் பெற்றனர்.

புத்தர் பிறந்தார்!

கருவுற்ற பத்தாவது மாதத்தில் மாயாதேவி தேவதாக நகரில் தன் தந்தையின் அரண்மனைக்குச் செல்ல விரும்பினாள். உடனே அரசர் அவள் விரும்பிய வண்ணம் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தார். கபிலவாஸ்துவிலிருந்து