பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 ⚫ போதி மாதவன்

சஞ்சயன்' முதலிய விந்தியப் பிரதேசத்து வேதியர்களும் சில வணிகர்களும் சங்கத்தில் சேர்ந்தனர்.

யசன்

அந்தக் காலத்தில் காசியில் அளப்பருஞ் செல்வமுள்ள ஒரு வணிகரின் மைந்தனான யசன் வசித்திருந்தான். ஒரு நாள் இரவு, அவன் தன் அரண்மனையிலிருந்த ஆண்களும் பெண்களும் அலங்கோலமான நிலையில் துயில் கொண் டிருந்த காட்சியைக் கண்டு, சித்தார்த்தரைப் போலவே வெறுப்படைந்து, இரகசியமாக வெளியேறி விட்டான். அவன் வெளியே வரும்போது உயர்ந்த உடைகளையும் நகைகளையும் அணிந்திருந்தான். சோகமயமான வாழ்க் கையில் மக்கள் மோகங்கொண்டு மூழ்கியிருக்கும் பரிதாபத்தைப் பற்றி எண்ணியவண்ணம் அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் இஸிபதனத்தில் மான்சோலையருகே செல்லுகையில், பொழுது விடியும் நேரமாயிற்று.

‘அந்தோ! அந்தோ! எத்தனை துன்பங்கள்! எத்தனை துக்கங்கள்!’ என்று அவன் தனக்குள்ளேயே உரக்கக் கூவிக் கொண்டான்.

அங்கே இரவிலிருந்தே உலாவிக்கொண்டிருந்த ததா கதர் அதைக் கேட்டு, ‘என்ன துக்கம்! இங்கே துக்கமுமில்லை, துயரமுமில்லை. உனக்கு நல்வரவு! இங்கே வந்தால் மன அமைதி பெறலாம். உனக்குத் தருமத்தை உபதேசிக்கிறேன், தருமமே துக்கத்தை நீக்கும்!’ என்று அன் போடு அழைத்தார்.

யசன் ஞானம் பெறும் வேளை வந்துவிட்டது. அவன் உள்ளே சென்று, வள்ளலை வணங்கி, அருகே அமர்ந்து உபதேசம் கேட்டான். அவனுக்கு மெய்யறிவு தோன்றிற்று. அந்நிலையில் அவன் ஆடை ஆபரணங்களால் அலங்கரித்-