பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 201

மான பந்தங்கள், மானிட பந்தங்கள்–யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள். சோதரர்களே, பல்லோருடைய நன்மைக்காகவும், பல்லோருடைய பேரின்பத்திற்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, தேவர்கள், மனிதர்கள் (யாவருடைய) சுகத்திற்காகவும், நன்மைக்காகவும், இன்பத்திற்காகவும் நீங்கள் வெளியே புறப்பட்டுச் செல்லுங்கள்!

‘எந்த இருவரும் சேர்ந்து செல்லாதீர்கள். சோதரர்களே, தொடக்கத்தில் இனிதாயும், நடுவில் இனிதாயும், முடிவில் இனிதாயும், உள்ள தருமத்தைப் பிரகடனம் செய்யுங்கள். பூரணமாக நிறைவு பெற்றுள்ள. பரிசுத்தமான தரும வாழ்வின் அமிசங்களையும், அவற்றின் உட் பொருளையும் நீங்கள் தெரியப்படுத்துங்கள். காம வெறி முதலிய மண்ணினால் அதிகம் மறைக்கப் பெறாத கண்களையுடைய மக்கள் இருக்கின்றனர். தரும உபதேசத்தைச் செவியுறாமல் அவர்கள் நசித்துக் கொண்டிருக்கின்றனர். சிலராவது புரிந்து கொள்வர். அறவழியைப் போதிக்க நான் நேரில் உருவேலாவுக்குச் செல்கிறேன்.’[1]

பிக்குக்கள் வெளியேறும்போது, பெருமான் அவர் களுக்கு மேலும் கூறவேண்டிய ஆலோசனைகளை யெல்லாம் கூறினார். தருமமும் விநய ஒழுக்கமும் மறைத்து வைக்கப் பெறாமல் உலகிலே நன்கு துலங்கும் படி செய்ய வேண்டும் என்றார். சத்தியம் நிறைந்த உன்னதமான தருமம் அதற்குத் தகுதியற்ற இழிதகை மாக்களிடம் சிக்கிவிடாமல் கவனிக்க வேண்டும்


  1. ‘விநயபிடகம்.’

போ-13