பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 ⚫ போதி மாதவன்

மறுநாள் காலையில் அவரும் சீடர்களும் குகையுள் சென்று பார்க்கையில், ததாகதர் உதய சூரியனைப் போன்ற ஒளியுடன் அமர்ந்திருக்கக் கண்டனர். மடிந்து கிடந்த பாம்பின் உடலைப் பார்த்து அவர்கள் பெருவியப் படைந்தனர். ‘அதனுடைய அனலை எனது நெருப்பு வென்று விட்டது!’ என்று ததாகதர் கூறினார்.

சாக்கிய முனிவரின் தவவலிமையையும், இருத்தி ஆற்றலையும் கண்டு காசியபர் வியந்தார். ஆயினும் போதிநாதர் தம்மைப் போன்ற புனிதர் அல்லர் என்று அவர் தம் மனத்துள் எண்ணிக் கொண்டார்.

பின்னர் அந்தப் பகுதியில் திருவிழா ஒன்று நடந்தது. அதற்கு ஏராளமான மக்கள் வருவர் என்றும், அப்போது சாக்கிய முனிவர் அங்கேயிருந்தால், அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்டுத் தம்மைக் கைவிட்டு விடக் கூடும் என்றும், தமது செல்வாக்குக் குறையும் என்றும் காசிய பருக்குப் பொறாமை தோன் றிற்று. அதைத் தாமாகவே உணர்ந்து கொண்ட ததாகதர், திருவிழாக் காலத்தில் மெதுவாக வெளியே சென்று விட்டு, அது முடிந்த பின்பு திரும்பினார்.

காசியபர் அதைப்பற்றி விசாரிக்கையில், சாக்கிய முனிவர், ‘தாங்கள் விரும்பியபடியே நான் நடந்து கொண்டேன்!’ என்றார். அவர் விருப்பம் இவருக்கு எப்படித் தெரிந்தது? இதைப் பற்றிக் காசியபர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆயினும் அவர் செருக்குமட்டும் அழியவில்லை.

ததாகதர் அவரை நோக்கி, ‘நீர் உண்மையைக் காண்கிறீர். ஆனால் உமது உள்ளத்திலுள்ள பொறாமையால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர் பொறாமையும் புனிதமுள்ளதா? அதுவே அகங்காரத்தின் கடைசிச் சின்னமாக