பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 217

என்றும், அவள் அதைத் தமக்கு விற்கவோ, அளிக்கவோ விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

‘அரசர் என்ற, முறையில் தாங்கள் விரும்பினால் அதை எடுத்துக் கொள்ள இயலாதா?’

‘உபவனத்தின் அழகு குன்றிப்போனாலும் கவலை யில்லை; அந்த இடத்தை அபகரிக்க நான் விரும்பவில்லை!’

கோதாவரி-மன்னன் உண்மையை உணர்ந்து உவகை வெள்ளத்தில் ஆழ்ந்தான். பேரரசர் பிம்பிசாரர் விரும்ப வில்லை! அம்மன்னன், ‘அந்த மேடுதான் தங்கள் பூந் தோட்டத்தின் அழகைத் துலக்கமாக எடுத்துக் காட்டுகின்றது!’ என்று புகழ்ந்து பாராட்டினான். மகத மன்னரின் நீதி அவ்வளவு உயர்வாக இருந்தது.

ஆனால் பிம்பிசாரர் பௌத்த தருமத்தை மேற்கொள்ளுமுன்னால், வேணு வனத்தைப் பெருங்குடியிலே தோன்றிய ஒரு தனிகரிடமிருந்து அபகரித்திருந்தார். சிறுவயதிலேயே, அவர் இளவரசாயிருந்த காலத்திலேயே, அந்த வனத்தில் அவருக்கு ஆசை பாய்ந்தது. தாம் மணி முடி புனைந்ததும், அதை ஆர்ச்சிதம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கருதியிருந்தார். பின்னால் அவ்வாறே வேணு வனத்தை அரசர்க்குரிய உரிமையில் எடுத்துக்கொண்டார். அவ்வனத்திற்கு உரியவரும் மாண்டுபோய்ப் பின்னால் ஒரு சர்ப்பமாகப் பிறந்திருந்தார். அவர் மன்னரிடம் தமக்குள்ள பகையை மறவாமல், வேணு வனத்திலேயே பாம்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார். மன்னர் அங்கே அயர்ந்துள்ள வேளையில் அவரைத் தீண்டிவிட வேண்டும் என்று அவர் காலம் கருதியிருந்தார்.

போ -14