பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 219

நண்பர்களாயிருந்தவர்கள். பின்னாலும் அவர்கள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்ந்து வந்தனர்.

இராஜகிருகத்திற்கு அருகே நாலந்தா[1] என்ற நகரத்தில் மாதரா என்ற அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்குச் கோஷ்திலா என்ற குமரனும், சாரீ என்ற ஒரு பெண்ணும் இருந்தனர். கோஷ்திலா உலகாயத தத்துவ நூல் கற்பதற்காகச் சிறு வயதிலேயே தென்னிந்தியாவுக்கு வந்து விட்டார். இங்கே சகல சாத்திரங்களையும் கற்றுணரும் வரை நகங்களை எடுப்பதில்லை என்ற வைராக்கியத் துடன் இருந்ததால், அவருக்கு ‘தீர்க்கநகா’[2] என்ற காரணப் பெயரும் உண்டாயிற்று.

சாரீ என்ற மாதரசி தென்னிந்தியாவிலிருந்து அங்கு சென்றிருந்த திஷ்யர் என்ற பிராமணரை மணந்து இல் வாழ்க்கை நடத்தி வருகையில், அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். திஷ்யருடைய குமரன் என்பதால் அவனை உபதிஷ்யன் (பாலியில் உபதிஸ்ஸா ) என்றும், தாயின் பெயரை வைத்து சாரீபுத்திரன் என்றும், குடும்பப் பெயரை வைத்து சாரத்வதி புத்திரன் என்றும் அழைத்து வந்தனர். ஆயினும் பௌத்த இலக்கியத்திலே சாரீபுத்திரன் என்ற பெயரே பெரும்பாலும் வழங்கிவருகின்றது

சாரீபுத்திரர் இளமையிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். அக்காலத்து அந்தணர் அறிய


  1. நாலந்தாவிலே புகழ்பெற்ற சர்வகலாசாலை ஒன்று இருந்து வந்தது. பின்னால் பல நூற்றாண்டுகள் வரை அது பௌத்த தருமத்திற்கு உறைவிடமாக இருந்தது.
  2. தீர்க்கநகா- நீண்ட நகமுள்ளவர்.