பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 223

வழியிலே அவரைக் கண்ட மௌத்கல்யாயனர், அவருடைய பெருமகிழ்ச்சிக்கு உரிய காரணம் இருக்கும் என்று கருதினார். சாரீ புத்திரர் தாம் கேட்டறிந்த சுலோகத்தைக் கூறி, ‘இது வரை எவரும் வெளியிட்டிராத வார்த்தைகளையே (செய்தியையே) ததாகதர் சொல்லி யுள்ளார்!’ என்று பாராட்டியுரைத்தார்.

இருவரும் அங்கிருந்து வேணுவன விகாரையை நோக்கிப் புறப்பட்டனர், அவர்களுடன் இரு நூற்றைம்பது சீடர்களும் தொடர்ந்து சென்றனர்

அந்தணர் இருவரும் தம்மை நோக்கி வந்துகொண் டிருப்பதைக் கண்ட ததாகதர், தம்முடன் அமர்ந்திருந்த பிக்குக்களைப் பார்த்து, இதோ வருகிற இந்த இருவரும் என் சீடர்களில் முதன்மையான இருவராக இருப்பார்கள்; ஒருவன் ஞானத்தில் நிகரற்று விளங்குவான், மற்றவன் சித்திகளில் (இருத்தி ஆற்றல்களில்) நிகரற்று விளங்குவான்!’ என்று கூறி அருளினார்.

பின்னர், உள்ளங்கனிந்த இனிமையுடன், அவ்விருவரையும் முகம் நோக்கி, ‘வருக!’ என்றார்.

உடனே, அவர்கள் கைகளிலே ஏந்தியிருந்த முக்கோல் களும், கமண்டலங்களும், சடைமுடியும் எல்லாம் மாறி, அவர்கள் துவராடை தரித்த முண்டிதமான பிக்குக்களாகக் காட்சியளித்தனர். அவ்வாறே அவர்களுடைய அடியார்களும் மாறிவிட்டனர். எல்லோரும் ‘தரையில் வீழ்ந்து பகவரின் பாதங்களை வணங்கி எழுந்து, அவர் அருகிலே சூழ்ந்து அமர்ந்துகொண்டனர்.

சாரீபுத்திரர் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய போதிலும், சிறிதளவும் செருக்கில்லாமல், அடியார்க்கு அடியராக நடக்கும் இயல்புடையவர். விகாரையிலே