பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 ⚫ போதி மாதவன்

யளித்துக் கொண்டிருக்கமாட்டா என்பதை வலியுறுத்திச் சொன்னார்.

மன்னர் ஐயனைச் சிலநாள் கூடப் பிரிந்திருக்க மனம் வருந்தி, அவருடைய சிகையில் கொஞ்சமும், அவர் கிள்ளி யெறிந்த நகங்களையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டாராம். அரண்மனைக் கோயிலில் அவைகளுக்குத் தூப தீபங்கள் காட்டி மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போது பகவர், ‘இவைகளை ஆலயத்திலே வைத்து விட்டு, உள்ளத்திலே என் போதனையைப் பதிய வைத்துக் கொள்ளவும்’ என்று கூறினாராம். பின்னர் மன்னர் தமது மாளிகைக்குச் சென்றார்; ஐயனும் ஆயிரம் பிக்குக்களுடன் கபிலவாஸ்துவுக்குப் புறப்பட்டார்.