பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 253

சுத்தோதனர், கணவரைப் பிரிந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவள் வாழ்ந்து வந்த முறையை! வியந்து கொண்டே விவரமாகக் கூறினார். சித்தார்த்தரைப் பற்றிய செய்திகள் வந்த காலங்களில், அவள் அவைகளைக் கேட்டுத் தன் கணவரைப் போலவே தானும் நடந்து வந்தாள். அவரைப் போலவே தானும் சீவர ஆடை புனைந்தாள்; கூந்தலைக் கத்தரித்துக் கொண்டாள்; ஒவ்வொரு நாளும் ஒருவேளை உணவே உட்கொண்டு வந்தாள்; சித்தார்த்தரைப் போலவே தானும் தரையின் மீது படுத்து உறங்கி வந்தாள்.

வள்ளலும், யசோதரையை அன்புடன் நோக்கி, முந்திய பிறவிகளிலும் அவள் தம்மையே விரும்பித் தம்முடனேயே வாழ்ந்து கொடுந்துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, போதிசத்துவராக விளங்கி தமக்கு ஒப்பற்ற உதவி செய்து வந்த வரலாறுகளை எடுத்துக் கூறினார். இந்தப் பிறவியிலும் அவள் தம்மை அடைந்ததன் காரணம், முற்பிறவிகளில் அவள் புத்தரையே மணந்து கொள்ள வேண்டுமென்று நோற்ற நோன்பு என்றும், அவளுடைய தவ வலிமைக்கு அளவில்லை என்றும் விளக்கிச் சொன்னார்.

இராகுலன்

புத்தர் கபிலவாஸ்துவுக்கு வந்த ஏழாம் நாளில் யசோதரை, மைந்தன் இராகுலனை இளவரசனைப் போலச் சிங்காரித்து, அப்போது அரண்மனைக்கு விஜயம் செய்திருந்த புத்தர் பிரானை அவனுக்குக் காட்டி, என் அன்பே! அதோ பிக்குக்களின் நடுவே தங்க நிறத்துடன், பிரும்மாவைப் போன்ற ஒளியுடன் இருக்கும் துறவியே உனது தந்தையாகிய புத்தர் பெருமான். அவர் பிறக்கும் போது நான்கு பெரிய கொப்பரைகளிலே நவரத்தினங்களும் நிதிகளும் நிறைந்து தோன்றின. அவர் துறவு