பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பதினைந்தாம் இயல்

ஜேத வனம்

‘துயரமடர்ந்து வளர்ந்துன்னைச்
சுற்றி வளையும் வேளையிலே
முயலும் முயற்சி யின்றி ஒரு
மூலை தேடி இருப்பது(ம்) ஏன்?
அயலிலுள்ளார் படும் பாடும்
அழுகண்ணிரும் கண்டுனது
மயலை முற்றும் மாற்றுவையே
மனத்தை கன்றாய்த் தேற்றுவையே!”

–உமர்கய்யாம்

றுபது பெரிய கூடங்களும், அறுபது சிறிய கூடங்களும், ஏராளமான அறைகளும் அடங்கிய மிகப் பெரிய விகாரை ஒன்றை அநாத பிண்டிகர் சிராவஸ்தி நகரிலே கட்டி முடித்திருந்தார். நீராடும் அறைகள், உடைகள் உடுக்கும் அறைகள், பண்டகசாலைகள் முதலியவைகளும், கிணறுகளும் குளங்களும் அங்கே அமைந்திருந்தன. புத்தர் பெருமான் சொல்லியிருந்த ஆலோசனைகளின்படியாவும் முறையாக அமைக்கப் பெற்றிருந்தன. சாரீபுத்திரர் அங்கேயே தங்கியிருந்து எல்லா வேலைகளையும் கவனித்து வந்தார்.

அந்த விகாரையை மகாராஜாக்களைத் தவிர எவரும் எளிதில் அமைத்திருக்க முடியாது. எனினும் பணத்தைத் தண்ணிர் போல அள்ளிவிட்டு அநாத பிண்டிகர் அதைக் கட்டி முடித்திருந்தார். விகாரை அமைப்பதற்கு வேண்டிய

போ-18