பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜேத வனம் ⚫ 285

பெரும்பயனை அடைந்தது போல், அவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலரும் அன்போடு அவைகளை ஏற்றுக் கொண்டார். ‘தீமைகளையெல்லாம் விலக்கி ஜேதவனம் இந்த இராஜ்யத்திற்கு நிலையான சாந்தியை அளிப்பதாக!’ என்றும், ‘அநாத பிண்டிகரின் ஆனந்தம் ஒன்று பலவாகப் பெருகி வளரட்டும்!’ என்றும், அவர் வனத்தையும் வள்ளலையும் வாயார வாழ்த்தினார். விகாரைக்கு ஜேதவன விகாரை’ என்றும், பிக்குக்கள் வசிக்கும் மாளிகைக்கு ‘அநாத பிண்டிகர் ஆராமம்’[1] என்றும் இரண்டு வள்ளல்களின் பெயர்களையும் ஒன்று சேர்த்துப் புத்தர் பெருமான் அவைகளுக்குப் பெயர்கள் வைத்தார். இளவரசர் ஜேதர் தமது பெயரே முதலில் விளங்குவதை எண்ணிக் களிப்படைந்தாராம்! அநாத பிண்டிகர் அடைந்த பெருமையை அளவிட்டுரைக்க இயலாது. பிற்காலத்து வரலாறுகளிலே புத்தருடைய பிரதம சீடர்கள் எண்பது பேர்களில் அவரும் ஒருவராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதே அவர் பெருமைக்குச் சான்றாகும்.

பிரசேனஜித்து

சாக்கிய முனிவர் தமது தலைநகருக்கு வந்திருப்பதை அறிந்து பார்த்திபர் பிரசேனஜித்தும் ஜேதவனம் சென்றிருந்தார். அவர் அருள்முனிவரைத் தனியாகத் தரிசித்து இரு கைகளையும் கூப்பி வணங்கி முகமன் கூறினார். ‘தேடி வைப்பது’ ஊரார் பணம்; தானம் செய்வதே தமது செல்வம்’ என்ற உண்மையைக் கடைப்பிடித்து அநாத பிண்டிகர் கட்டிவைத்த அரிய அறநிலையத்தை அவர்


  1. ஆராமம் - பிக்குக்கள் தங்கும் இடம்; சங்கத்தார் வசிக்கும் இடம் என்பதால் சங்காராமம் என்று குறிப்பிடுவர்.