பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜேத வனம் ⚫ 287

‘நமது நற்செயல்களும் தீச்செயல்களும் நம்மை விட்டு நீங்காமல் நிழல்களைப்போலத் தொடர்ந்துகொண்டேயிருப்பவை.

அன்புள்ள இதயமே முதற்கண் அவசியமாகும்!

‘நாம் ஒரே மகனைப் பெற்றிருந்தால், அவனை எப்படிப் பேணுவோமோ, அவ்வாறே உமது குடிகளைப் பேணவேண்டும். அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டாம்; அவர்களை அழிக்க வேண்டாம்! உமது புலன்களை யெல்லாம் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்; நீதியற்ற சமயக் கொள்கைகளைக் கைவிட்டு நேரான பாதையிலே நடக்கவேண்டும். மற்றவர்களைத் தாழ்த்தி நசுக்கி, நீர் மேலெழ எண்ணக்கூடாது. அல்லற்படுவோர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடைய துன்பம் களையத் துணைபுரியுங்கள்!

மன்னர் பதவி என்ற மாட்சியில் செருக்கடைய வேண்டாம்; இச்சகம் பேசுவோரின் இனிய வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்!

‘கடுமையான தவங்களை மேற்கொண்டு ஒருவர் துயரப்படுவதில் பயனில்லை ; புத்தரைப் பற்றியும், அவர் போதிக்கும் நீதியான தருமத்தைப் பற்றியும் சிந்தனை செய்து பார்க்கவும்.

‘பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகிய பாறைகள் நாலுபுறங்களிலும் நம்மைச் சூழ்ந்து நெருக்கி நிற்கின்றன. இந்தத் துக்க மலையி-