பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 297

எண்ணி வருத்தமடைந்து, அவளை உடனே வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறினார். விசாகை தான் அடிமையில்லை என்றும், தான் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்க முடியாது என்றும் மறுமொழி புகன்றாள்.

மிகாரர் இந்த விஷயத்தைப் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தார். இந்தப் பஞ்சாயத்தார் எட்டுப் பேர்கள். அவர்கள் சாகேதத்திலிருந்து விசாகையோடு தனஞ்சயரால் அனுப்பப் பெற்றிருந்த அவளுடைய போஷகர்கள். அவர்கள் கூடி விசாரித்தனர். விசாகை தான் உணவைப் ‘பழையது’ என்று கூறியது உண்மைதான் என்றும், மிகாரர் உண்டு வந்த உணவு அவர் முந்திய பிறவிகளில் செய்த பழமையான தருமங்களின் பயனாகக் கிடைப்பது என்றும், ஆனால் இந்தப் பிறவியில் அவர் தான தருமங்களை நிறுத்தி விட்டதால் மேலைக்கு வேண்டிய புண்ணியம் அவருக்கு இல்லாமற் போகிறதே என்ற வருத்தத்தால் தான் அவ்வாறு கூற நேர்ந்தது என்றும் விளக்கிச் சொன்னாள். அந்த விளக்கம் எல்லோருக்கும் திருப்தியளித்தது. மிகாரரும் புத்தறிவு பெற்று மகிழ்ச்சியடைந்தார். அப்போது விசாகை தான் அவர் மாளிகையைவிட்டு வெளியேறச் சித்தமாயிருப்பதையும், அங்கேயிருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தாள்.

மிகாரர் அவள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விசாகை கூறினாள்: ‘தாங்கள் ஜைனத் துறவிகளை ஆதரிப்பவர்கள்; நான் புத்தரையும் தருமத்தையும், சங்கத்தையும் சரணடைந்தவள். நான் இங்கேயே தங்க வேண்டுமானால், நான் போதிமாதவரின் உபதேசங்களைக் கேட்டுவரவும், பிக்குக்களுக்குத் தான-

போ -19