பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ⚫ போதி மாதவன்

”நான் பிரமனைக்கூட வணங்குவதில்லை, ஆனால், இந்தக் குழவியை இறைஞ்சி ஏத்துகிறேன்! ஆலயந் தோறும் அமர்ந்துள்ள தெய்வங்கள் யாவும் தத்தம் பீடங்களை விட்டிறங்கி வந்து இவனை வணங்கும்.

‘எனக்கு வயதாகிவிட்டது. அந்த நினைப்பு உண்டானதும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. ஏனெனில், என் முடிவு நெருங்கிவிட்டது. ஆனால், உன் மகன் இத்தரணியையெல்லாம் ஆளப்போகிறான்; ஜீவ ராசிகள் அனைத்திற்காகவுமே இவன் அவதரித்துள்ளான்.

‘கப்பலுடைந்து கடலுள் தத்தளிப்பவர்களுக்குத் தாரகமாகும் கரைபோல, இவனுடைய பரிசுத்தமான போதனை விளங்கும். இவனது தருமம் தண்மை நிறைந்த பொய்கையாயிருக்கும்; ஆசைத் தீயால் வெந்தவர்களும் நொந்தவர்களும் அப்பொய்கை நீரை அள்ளியள்ளிட் பருகலாம்.

‘காமக் குரோதங்களாகிய நெருப்பின் மேலே இவனுடைய கருணையாகிய கார்முகில் கவிந்துகொண்டு, தருமமாகிய மழைநீரால் அத்தீயை அணைத்துவிடும்.

‘ஏக்கமுற்றுத் தவிப்பவர்களுக்கு இவனே புகலிடம்; தாமே பின்னிக்கொண்ட அறியாமை, பாவம் என்னும் வலைக்கண்ணிகளிலிருந்து சகல ஜீவன்களுக்கும் கடைத் தேற்றமளிக்கும் வள்ளல் இவன்!

‘தருமராஜா வந்துவிட்டான்! ஏழைகளின் பங்காளன் வந்துவிட்டான்! துயரப்படுவோர், திக்கற்றவர் யாவரை யும் காப்பாற்றுவோன் வந்துவிட்டான்!

‘அரசே! இந்தக் குழந்தை அரசவமிசத்திலே தோன் றிய தெய்வத் தாமரை மலர்! ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு