பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 ⚫ போதி மாதவன்

வர விரும்புகிறேன். நகருக்குள் வருகிற பிக்குக்களுக்கும், இங்கிருந்து வெளியே செல்லும் , பிக்குக்களுக்கும், நோயுற்ற பிக்குக்களுக்கும், அவர்களுக்கு பணி செய்யும் பிக்குக்களுக்கும் நான உணவு அளித்துவர விரும்புகிறேன். பிணியாளருக்கு மருந்துகள் அளிக்கவும் விரும்புகிறேன். எப்பொழுதும் சங்கத்திற்கு அரிசிக் கஞ்சியை நானே அனுப்பி வர வேண்டும். சங்கத்தில் சேரும் பிக்குணிகள் நீராடும்போது அணிந்து கொள்ளத்தக்க உடைகளையும் அடியேனே அளிக்க வேண்டும்!’ என்று அவள் தான் கேட்ட எட்டு வரங்களையும் விளக்கிச் சொன்னாள்.

அவ்வாறெல்லாம் ஏன் கேட்கிறாள் என்பதையும் அவள் எடுத்துக் கூறினாள். முந்திய நாள் மழையில் பிக்குக்கள் நனைந்ததையும், மாற்று உடைகளில்லாமல் அவதிப்பட்டதையும், எங்கு உணவு கிடைக்கும், ஆராமங்கள் எங்கேயிருக்கின்றன என்பவற்றையெல்லாம் தெரியாமல் பிக்குக்கள் கஷ்டப்படுவதையும், பெண்டிர் குளிக்கும்போது தக்க உடைகள் இருக்க வேண்டும் என்பதையும் ஐயன் மனமுருகும்படி அவள் விவரித்துச் சொன்னாள்.

இத்தகைய விஷயங்களில் ததாகதர் யாருக்கும் எளிதாக விட்டுக் கொடுப்பதில்லை. ஆயினும் விசாகை கூறிய காரணங்கள் பொருத்தமாயிருந்ததால் அவள் கேட்ட வரங்களுக்குச் சம்மதித்து விட்டார்.

‘இத்தகைய வரங்களால் உனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய், விசாகா?’ என்று பெருமான் கேட்டார்.

‘பிற்காலத்தில் பிக்குக்களையும், பிக்குணிகளையும் நான் பார்க்க நேரும்போது, அவர்களுக்கு ஒரு சமயப் உடைகளும், உணவும் அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தது என்று எண்ணி மகிழ்வேன்! அந்த