பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 303

தருமத்தை மேற்கொண்டிருந்த போதிலும், ஆசைகளுக்கு அடிமைப்பட்டுத் திருந்தாத ஒழுக்கத்துடன் இருந்தார். மௌத்கல்யாயனர் அவரிடம் சென்று. ‘ஐய, எழுந்த பகவர் உம்மைக் கண்டு பிடித்து விட்டார். நீர் இந்தக் கூட்டத்திற்கு உரியவரல்லர்!’ என்று சொன்னார். மூன்று முறை இவ்வாறு கூறியும் அந்த மனிதர் எழுந்திருக்க வில்லை. அன்று கூட்டத்தை நடத்தும் பொறுப்பை வகித்திருந்த மௌத்கல்யாயனர் அவருடைய கையைப் பிடித்து எழுப்பி வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டுக் கதவையும் தாழிட்டார். பிறகுதான் புத்தர் உபதேசம் செய்ய இசைந்தார்.

கடலும் தருமமும்

புத்தர் பெருமான் அன்றிரவு கடலின் விசேட அமிசங்களைக் குறிப்பிட்டு, அதனோடு தமது தருமத்தையும், சங்கத்தையும் ஒப்பிட்டு விளக்கினார். அவர் கூறியதாவது:[1]

‘ஓ பிக்குக்களே! மகா சமுத்திரத்தினிடம் ஆச்சரியமான அபூர்வமான எட்டுக் குணங்கள் இருக்கின்றன; அவைகளை இடைவிடாது கண்டு அதனுள் வாழும் பெரிய பிராணிகள் இன்புற்று அதிலே திளைத்துக் கொண்டிருக்கின்றன.

‘அதே முறையில், ஓ பிக்குக்களே, திருமததிலும் விநயத்திலும் அதிசயிக்கத்தக்க அபூர்வமான எட்டுக் குணங்கள் இருக்கின்றன; அவைகளை இடைவிடாது கண்டு பிக்குக்கள் இன்புற்றுத் தருமத்திலும் விநயத்திலும் திளைத்துக் கொண்டிருக்கிறார்கன். அந்த எட்டுக்குணகம் எவை?


  1. இந்தச் சொற்பொழிவு ‘சுள்ள வக்க’த்திலுள்ளது.